அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் முதல் மனைவி இவானா ட்ரம்ப் வியாழக்கிழமை காலமானார். அவருக்கு வயது 73.
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் முதல் மனைவி இவானா ட்ரம்ப் காலமானார். அவருக்கு வயது 73.
நியூயார்க் நகரில் உள்ள இல்லத்தில் இவானா ட்ரம்ப் மாரடைப்பால் காலமானார் என்று முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மன்ஹாட்டனில் உள்ள அப்பர் ஈஸ்ட் சைட் அடுக்குமாடிக் குடியிருப்பில் இவானா ட்ரம்ப் வசித்து வந்தார். அவருக்கு உடல் நலக்குறைவுஏற்பட்டதாக மருத்துவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மருத்துவக் குழுவினர் இவாங்கா ட்ரம்ப் இல்லத்துக்கு சென்று பார்த்தபோது, அவர் வீட்டின் கீழ் தளத்தில் மயங்கிக் கிடந்தார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
கோத்தபய ராஜபக்சே ராஜினாமா; அதிகாரபூர்வமாக அறிவித்தார் சபாநாயர் மகிந்தா
இது குறித்து போலீஸார் கூறுகையில் “ நாங்கள் மருத்துவர்கள் குழுவிடம் கேட்டபோது, இவானா ட்ரம்ப் மாடிப்படியில் கீழே விழுந்து கிடந்தார் எனத் தெரிவித்தனர். இவானா ட்ரம்ப் எவ்வாறு கீழே விழுந்தார், எப்படி அவர் உயிரிழந்தார் என்பது குறித்து விசாரித்து வருகிறோம். ஆனால், மருத்துவர்கள் குழுவினர்தான் அவர் இறப்புக்கான காரணத்தை கூற முடியும்” எனத் தெரிவித்தனர்.
இவானா ட்ரம்ப் செக்கெஸ்லோவோகியாவில் கம்யூனிஸ்ட்ஆட்சி இருக்கும்போது, கோட்வால்டோ நகரில் கடந்த 1949ம் ஆண்டு பிப்ரவரி 20ம் தேதி பிறந்தார். அந்த நாட்டிலிருந்து கடந்த 1970களில் வெளியேறி அமெரிக்காவில் குடியேறினார் இவாங்னா ட்ரம்ப். அமெரிக்காவில் ட்ரம்ப்பின் வணிக நிறுவனங்களில் மூத்த அதிகாரியாக இவாங்கா பணியாற்றினார்.
அட்லான்டிக் சிட்டியில் உள்ள ட்ரம்ப் கேஸ்டில் ஹோட்டலில் தலைமை நிர்வாக அதிகாரியாக இவாங்னா ட்ரம்ப் இருந்தார். ட்ரம்பின் கிராண்ட் ஹயாத் ஹோட்டல், ட்ரம்ப் டவர் ஆகியவற்றை வடிவமைத்ததில் இவானாவுக்கு பெரும் பங்கு உண்டு. இவானா ட்ரம்ப் தனியாக ஆடை நிறுவனத்தை நடத்தினார், ஏராளமான புத்தகங்களையும் எழுதியுள்ளார்.
கடந்த 1977ம் ஆண்டு இவாங்காவை, டொனால்ட் ட்ரம்ப் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு டொனால்ட் ட்ரம்ப் ஜூனியர், இவாங்கா ட்ரம்ப், எரிக் ட்ரம்ப் ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர். கடந்த 1992ம் ஆண்டு இவானா டிரம்ப்பை டொனால்ட் ட்ரம்ப் விவாகரத்து செய்துவிட்டு, மார்லா மேப்பிளை 2வதாக திருமணம் செய்தார்.
இவானா ட்ரம்ப் மறைவு குறித்து டொனால்ட் ட்ரம்ப் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ இவானா பெருமை, அவரின் 3 குழந்தைகளான டொனால்ட் ட்ரம்ப் ஜூனியர், இவாங்கா, எரிக். அவர்களை நினைத்து இவானா பெருமைப்படுவார். அற்புதமான, அழகான, வியப்புக்குரிய பெண் இவானா. அனைவருக்கும் உற்சாகத்தை அளிக்கக்கூடிய சிறந்த வாழ்க்கையை இவானா வாழ்ந்தார்” எனத் தெரிவித்தார்
இலங்கை அதிபர் கோட்டபய ராஜபக்சே ராஜினாமா... மக்கள் போராட்டம் வலுத்த நிலையில் பதவி விலகல்!!
இவானா குறித்து அவரின் குடும்பத்தினர் கூறுகையில் “ முதலாளி்த்துவ நாட்டில் வாழ்ந்தாலும் கம்யூனிச நாட்டிலிருந்து வந்தவர். தனது குழந்தைகளுக்கு துணிச்சலையும், கடினமான சூழலை எதிர்நோக்கும் பக்குவத்தையும், மன உறுதியையும் கற்றுக்கொடுத்தார். எங்கள் தாய் அற்புதமானவர். சிறந்த தொழிலதிபர், தடகள வீராங்கனை, அழகானவர், அன்பான தாய், தோழி” எனத் தெரிவித்துள்ளனர்.