அதிபர் பதவியை கோத்தபய ராஜபக்சே ராஜினாமா செய்து இருப்பதை அதிகாரபூர்வமாக இலங்கை சபாநாயகர் மகிந்த யப்ப அபெவர்த்தனா இன்று அறிவித்தார்.
அதிபர் பதவியை கோத்தபய ராஜபக்சே ராஜினாமா செய்து இருப்பதை அதிகாரபூர்வமாக இலங்கை சபாநாயகர் மகிந்த யப்ப அபெவர்த்தனா இன்று அறிவித்தார்.
இலங்கை அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்து இருப்பதை சபாநாயகர் அதிகாரபூர்வமாக அறிவித்து இருப்பதை அடுத்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்னவாக இருக்கும் என்பதை உலகமே உற்று நோக்கி கவனித்து வருகிறது.
வரும் ஏழு நாட்களில் புதிய அதிபரை தேர்வு செய்ய வேண்டியது இருப்பதால், அனைத்து எம்பிக்களும் முறையாக கூடி முடிவு எடுக்க வேண்டியது இருக்கிறது. எனவே, போராட்டக்காரர்கள் இதற்கு வழி விடுத்து, சுமூக நிலை நாட்டில் ஏற்பட வழி செய்ய வேண்டும் என்று சபாநாயகர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதையடுத்து இன்று பத்திரிக்கையார்களுக்கு அளித்து இருந்த பேட்டியில், ''அடுத்த அதிபர் முறைப்படி தேர்வு செய்யப்படும் வரை இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே நீடிப்பார். அனைத்து எம்பிக்களும் கூடி முடிவு எடுப்பதற்கு சுமூகமான சூழலை ஏற்படுத்த வேண்டும்'' என்று கேட்டுக் கொண்டார்.
Watch : பெட்ரோல் பங்கு முன்பு 3-4 நாட்களாக காத்திருக்கும் மக்கள்!
இன்று பாராளுமன்றம் கூடி புதிய அதிபர் தேர்வு செய்யப்படுவார் என்று கூறப்பட்டு இருந்த நிலையில், நாளை பாராளுமன்றம் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் ராஜபக்சே குடும்பம்.. புகலிடம் வழங்கவில்லை என சிங்கப்பூர் அரசு விளக்கம்.
கடந்த 13ஆம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்வதாகக் கூறி இருந்த கோத்தபய ராஜபக்சே ராஜினாமா செய்யவில்லை. மாலத்தீவுக்கு மனைவியுடன் தப்பிச் சென்றார். அங்கும் எதிர்ப்பு கிளம்பியதால், சிங்கப்பூர் செல்வதற்கு முடிவு செய்தார். சிங்கப்பூரில், இறங்கிய நிலையில் நேற்று ராஜினாமா கடிதம் அனுப்பி வைத்தார்.
கோத்தபய ராஜபக்சே ராஜினாமா செய்ய வேண்டும் என்பது போராட்டக்காரர்களின் முக்கிய கோரிக்கையாக இருந்தது. அவர் ராஜினாமா செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்து இருந்தனர். ராஜினாமா அறிவிப்பு நேற்று வெளியானவுடன், தெருவுக்கு வந்து போராட்டக்காரர்கள் நடனம் ஆடி மகிழ்ந்தனர்.
சிங்கப்பூரில் தனிப்பட்ட வருகையாளராகத் தான் கோத்தபய சென்றுள்ளார். அந்த நாட்டிடம் அவர் அடைக்கலம் கேட்கவில்லை. சிங்கப்பூர் அரசாங்கமும் யாருக்கும் அடைக்கலம் கொடுப்பதில்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளது.
மாலத்தீவு செல்லும் முன்பு இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கேவை நியமிக்குமாறு சபாநாயகருக்கு கோத்தபய பரிந்துரை செய்துள்ளார். அதன்படி, ரணில் இடைக்கால அதிபராக தொடருவார் என்று கூறப்பட்டது. விரைவில் அனைத்துக் கட்சிகளின் ஒப்புதலுடன் பிரதமரையும் தேர்வு செய்யுமாறு ரணில் சபாநாயகரை கேட்டுக் கொண்டுள்ளார். ரணில் பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இதற்கிடையே உச்சநீதிமன்றத்தில் முன்னாள் அதிபரும், பிரதமருமான மகிந்த ராஜபக்சே, அவரது சகோதரும் முன்னாள் நிதியமைச்சருமான பசில் ராஜபக்சேவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டு இருக்கும் மனு இன்று விசாரணைக்கு வருகிறது. ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த மனுவை விசாரிக்கிறது. இந்த மனு விசாரிக்கப்படும் வரை நாட்டை விட்டு வெளியேறப் போவதில்லை என்று சகோதர்கள் இருவரும் அறிவித்துள்ளனர்.
இலங்கை அதிபர் கோட்டபய ராஜபக்சே ராஜினாமா... மக்கள் போராட்டம் வலுத்த நிலையில் பதவி விலகல்!!