முதல் அரசு முறை பயணமாக எகிப்து சென்றார் பிரதமர் மோடி.. அதிபருடன் இருதரப்பு பேச்சுவார்த்தை..

By Ramya s  |  First Published Jun 24, 2023, 6:25 PM IST

முதல் அரசு முறை பயணமாக எகிப்து சென்ற பிரதமர் மோடி, இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.


பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக எகிப்து சென்றடைந்தார். தலைநகரில் அவரை எகிப்து பிரதமர் வரவேற்றார். இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளுக்கு இந்த பயணம் மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது. இங்குள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஷியா மஸ்ஜித் அல்-ஹக்கிமையும் பிரதமர் நரேந்திர மோடி பார்வையிடுகிறார்.

தனது இரு நாட்டு பயணத்தின் இரண்டாவது கட்டமாக, பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 24 முதல் 25 அகிய தேதிகளில் எகிப்து நாட்டுக்கு அரசுமுறைப் பயணமாக கெய்ரோ சென்றுள்ளார். எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தாஹ் எல்-சிசியின் அழைப்பின் பேரில் இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் புதுதில்லியில் நடந்த குடியரசு தின விழாவில் தலைமை விருந்தினராக கலந்து கொண்ட எகிப்து அதிபர் மோடிக்கு அழைப்பு விடுத்தார். பிரதமர் மோடியின் முதல் எகிப்து பயணம் இதுவாகும்.

Tap to resize

Latest Videos

"ஜனாதிபதி உடனான பேச்சுகளைத் தவிர, பிரதமர் எகிப்திய அரசாங்கத்தின் மூத்த பிரமுகர்கள், சில முக்கிய எகிப்திய பிரமுகர்கள் மற்றும் எகிப்தில் உள்ள இந்திய சமூகத்துடன் தொடர்புகொள்வார்" என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் "இந்தியாவிற்கும் எகிப்துக்கும் இடையிலான உறவுகள் பண்டைய வர்த்தகம் மற்றும் பொருளாதார தொடர்புகள் மற்றும் கலாச்சார மற்றும் ஆழமான வேரூன்றிய மக்களிடையேயான உறவுகளை அடிப்படையாகக் கொண்டவை" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி மாதம் எகிப்து அதிபர் இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணம் வந்திருந்த போது, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை ஒரு மூலோபாய கூட்டாண்மைக்கு உயர்த்த ஒப்புக்கொள்ளப்பட்டது. மோடியின் வருகையிலிருந்து இந்த முன்னணியில் முன்னேற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

click me!