பிரதமர் மோடி குஜராத் முதல்வராக இருந்த காலத்திலிருந்தே தாவூதி போஹ்ரா சமூகத்துடன் உறவு கொண்டிருந்தார். எகிப்தில் உள்ள அவர்களது முக்கிய கலாச்சார தலமான மசூதிக்கு பிரதமர் மோடி செல்கிறார்.
பிரதமர் மோடி தனது எகிப்து பயணத்தின் இரண்டாவது நாளான ஞாயிற்றுக்கிழமை 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அல்-ஹகிம் மசூதிக்குச் செல்கிறார். கெய்ரோவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க அல்-ஹகிம் மசூதியில் பிரதமர் கிட்டத்தட்ட அரை மணிநேரம் செலவிடுவார். அல்-ஹகிம் மசூதி கெய்ரோவில் உள்ள தாவூதி போஹ்ரா சமூகத்திற்கான ஒரு முக்கியமான கலாச்சார தலமாகும். பிரதமர் மோடி குஜராத்தின் முதலமைச்சராக இருந்த காலத்திலிருந்து இந்தச் சமூகத்துடன் உறவைப் பேணிவருகிறார்.
பிரதமர் மோடி தனது எகிப்து பயணத்தின்போது, ஹெலியோபோலிஸ் போர் கல்லறைக்குச் சென்று, முதல் உலகப் போரின்போது எகிப்துக்காக உயிர் தியாகம் செய்த இந்திய வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறார்.
அல்-ஹகிம் மசூதி
அல்-ஹக்கீம் பை-அம்ர் அல்லா மசூதி, எகிப்திய தலைநகர் கெய்ரோவின் மையப்பகுதியில் உள்ள அல்-முயிஸ் தெருவின் கிழக்குப் பகுதியில் உள்ள கிட்டத்தட்ட 1000 ஆண்டுகள் பழமையான மசூதி. அல்-ஹக்கிம் மசூதி கெய்ரோவின் பாத்திமிட் கட்டிடக்கலை மற்றும் பண்பாட்டின் சின்னமாக விளங்கி வருகிறது.
செவ்வக வடிவில் உள்ள இந்த மசூதி 13,560-மீட்டர் பரப்பளவில் பரவியுள்ளது, அதில் 5000 சதுர மீட்டர் பரப்பில் பெரிய முற்றம் உள்ளது. மீதமுள்ள பகுதி மசூதியின் இருபுறமும் மூடப்பட்ட நான்கு மண்டபங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. மசூதியில் பதினொரு வாயில்கள் உள்ளன. கல்லால் ஆன பிரதான முகப்பு துனிசியாவில் உள்ள மஹ்தியா மசூதியைப் போல நுண் வேலைப்பாடுகளுடன் கூடியது.
ஆறு வருடங்களாக நடந்த விரிவான புனரமைப்புக்குப் பிறகு இந்த ஆண்டு பிப்ரவரி 27 அன்று மீண்டும் திறக்கப்பட்டது. 2017ல் சீரமைப்பு பணிகள் துவங்கி, சுவர்களில் ஏற்பட்ட விரிசல்கள், கதவுகள், பிரசங்க மேடை, கூரையில் உள்ள அலங்கார மர ஓடுகள் போன்றவை பழுதுபார்க்கப்பட்டுள்ளன.
தாவூதி போஹ்ரா
பிரதமர் மோடி குஜராத் முதல்வராக இருந்த காலத்திலிருந்தே தாவூதி போஹ்ரா சமூகத்துடன் உறவு கொண்டிருந்தார். 2011ஆம் ஆண்டில், தாவூதி போஹ்ரா சமூகத்தின் அப்போதைய மதத் தலைவரான சையத்னா புர்ஹானுதீனின் 100வது பிறந்தநாளைக் கொண்டாட அழைப்பு விடுத்திருந்தார்.
2014ஆம் ஆண்டு புர்ஹானுதீன் இறந்தபோது, அவரது மகனும், வாரிசுமான சையத்னா முஃபத்தால் சைபுதீனுக்கு ஆறுதல் கூறுவதற்காக பிரதமர் மோடி மும்பை சென்றார். இந்தச் சமூகத்தினரின் வணிகம் மற்றும் சமூக சீர்திருத்த நடவடிக்கைகளை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தின்போது, தண்டி யாத்திரயில் மகாத்மா காந்திக்கு தாவூதி போஹ்ரா சமூகம் எவ்வாறு உதவியது என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடி 2015ஆம் ஆண்டு தாவூதி போஹ்ரா சமூகத்தின் தற்போதைய மதத் தலைவரான சையத்னா முஃபத்தால் சைஃபுதீனைச் சந்தித்தார். 2016ஆம் ஆண்டில், சையத்னா பிரதமர் மோடியைச் சந்தித்தார். பங்களாதேஷ் பயணத்தின்போதுகூட, தாவூதி போஹ்ரா குழுவை பிரதமர் மோடி சந்தித்தார். 2018ஆம் ஆண்டில், இந்தூரில் உள்ள சைஃபி மசூதியில் இமாம் ஹுசைன் அவர்களின் நினைவாக நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
எகிப்து பாரம்பரியமாக ஆப்பிரிக்க கண்டத்தில் இந்தியா வர்த்தக உறவு கொண்டிருக்கும் மிக முக்கிய நாடாக உள்ளது. இந்தியா-எகிப்து இடையே இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் மார்ச் 1978 முதல் செயல்பாட்டில் உள்ளது.
தாஜ்மஹாலையே பின்னுக்கு தள்ளிய உலகின் விலையுயர்ந்த பங்களா - அதோட விலை என்னனு தெரியுமா?