“ தப்பான முடிவு எடுத்துட்டீங்க புடின்.. ரஷ்யாவுக்கு விரைவில் புதிய அதிபர்..” வாக்னர் குழு எச்சரிக்கை..

By Ramya s  |  First Published Jun 24, 2023, 3:55 PM IST

விளாடிமிர் புடின் தவறான தேர்வு செய்துவிட்டார் என்றும் ரஷ்யாவுக்கு விரைவில் புதிய ஜனாதிபதி வருவார் எனவும் வாக்னர் குழு தெரிவித்துள்ளது


உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் தாக்குதல் ஓராண்டுக்கும் மேலாக நீடித்து வரும் நிலையில் தற்போது அதிபர் விளாடிமிர் புடினுக்கு புதிய தலைவலி உருவெடுத்துள்ளது. Yevgeny Prigozhin தலைமையிலான வாக்னர் கூலிப்படையினர், ரஷ்யாவின் இராணுவத் தலைமையை அகற்றும் முயற்சியில் இரண்டு ரஷ்ய நகரங்களின் கட்டுப்பாட்டைக் கோரியுள்ளனர். மேலும் மூன்று இராணுவ ஹெலிகாப்டர்களையும் வீழ்த்தியதாகக் தெரிவித்துள்ளனர். புடினை பதவி நீக்கம் செய்ய மாஸ்கோவிற்கு ஆயுதமேந்திய படைகளை அனுப்பியதாகவும் கூறினார்.

மாஸ்கோவிற்கு தெற்கே 500 கிமீ தொலைவில் உள்ள Voronezh நகரத்தில் உள்ள இராணுவ வசதிகளையும் வாக்னர் போராளிகள் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வாக்னர் குழுவின் தலைவர், அதிபர் புடின் மற்றும் ரஷ்யாவின் இராணுவத்தை எச்சரித்திருந்தார். 

Tap to resize

Latest Videos

இதை தொடர்ந்து நாட்டு மக்களிடம் உரையாற்றிய அதிபர் விளாடிமிர் புடின் "வாக்னர் கூலிப்படையினரின் ஆயுதமேந்திய கிளர்ச்சி 'முதுகில் குத்திய செயல்' என்றும், குழுவின் தலைவர்  பிரிகோஜின், ரஷ்யாவைக் காட்டிக் கொடுத்தார் என்றும் கடுமையாக சாடினார்.

மேலும் "நாம் எதிர்கொண்டது துரோகம். ஆடம்பரமான லட்சியங்கள் மற்றும் தனிப்பட்ட நலன்கள் தேசத்துரோகத்திற்கு இட்டுச் சென்றது. துரோகத்தின் பாதையில் உணர்வுபூர்வமாக நின்றவர்கள், ஆயுதமேந்திய கிளர்ச்சியைத் தயாரித்தவர்கள், அச்சுறுத்தல் மற்றும் பயங்கரவாத முறைகளின் பாதையில் நின்றவர்கள், சட்டத்தின் முன்பு, நம் மக்களின் முன்பும் தவிர்க்க முடியாத தண்டனையை அனுபவிப்பார்கள்" என்று தெரிவித்தார்.

இந்தப் போரில், நமது மக்களின் தலைவிதி தீர்மானிக்கப்படும்போது, அனைத்து சக்திகளின் ஒருங்கிணைப்பு, ஒற்றுமை, பொறுப்பு ஆகியவை தேவை. இதுபோன்ற நேரத்தில் வாக்னர் குழுவின் இந்த முடிவு ரஷ்யாவிற்கும் அதன் மக்களுக்கும் கிடைத்த மிகப்பெரிய அடியாகும். ஆயுதமேந்திய கிளர்ச்சியைத் திட்டமிட்டு ஏற்பாடு செய்தவர்கள், ஆயுதமேந்திய தோழர்களுக்கு எதிராக ஆயுதங்களை உயர்த்தியவர்கள் ரஷ்யாவைக் காட்டிக் கொடுத்தனர். அதற்கு பதில் கொடுக்க வேண்டும்" புடின் கூறினார்.

புடினின் இந்த எச்சரிக்கை செய்தி வெளியான சில மணி நேரத்தில் வாக்னர் குழு இதற்கு பதிலளித்துள்ளது. ரஷ்ய ஜனாதிபதி தவறான முடிவை எடுத்துள்ளதாகவும், விரைவில் நாட்டில் ஒரு புதிய பிரதமர் வருவார் என்றும் தெரிவித்துள்ளனர். 

முன்னதாக வாக்னர் குழுவின் நடவடிக்கைகளுக்கு ரஷ்யா பதில் அளித்துள்ளது. அரசு சார்பில் ஒரு 'பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை' அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரஷ்யாவின் தேசிய பயங்கரவாத எதிர்ப்புக் குழு, ஃபெடரல் செக்யூரிட்டி சர்வீசஸ் அமைப்பு ஆகியவை ஆயுதமேந்திய கிளர்ச்சிக்கு அழைப்பு விடுத்ததாக பிரிகோஜின் மீது குற்றம் சாட்டியது. பிரிகோஜின் செயலுக்கு 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும். இதற்கிடையில், ப்ரிகோஜினைக் கைது செய்ய ரஷ்யாவின் எஃப்.எஸ்.பி அமைப்பு உத்தரவிட்டது. 

வாக்னர் குழு என்பது, பல்லாயிரக்கணக்கான போராளிகளைக் கொண்ட ஒரு தனியார் இராணுவ அமைப்பாகும். உக்ரைனில் மட்டும் 50,000 க்கும் அதிகமானோர் வாக்னர் குழுவை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. வாக்னர் படைகள் உக்ரைன் போரில் முக்கிய பங்கு வகித்து. ரஷ்யா - உக்ரைன் போர் உச்சத்தில் இருந்த போது, பக்முத் நகரை கைப்பற்றுவதில் வாக்னர் குழுவினர் வெற்றி பெற்றனர். இருப்பினும், பிரிகோஜின் அதிகளவில் ரஷ்ய இராணுவத் தலைவர்களால் விமர்சிக்கப்பட்டார்.

யார் இந்த யெவ்ஜெனி பிரிகோஜின்? 

வெற்றிகரமான முன்னாள் தொழிலதிபர், உக்ரைன் போர் தொடங்கியபோது தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தார். பிரிகோஜின் மற்றும் புடின் இருவரும் லெனின்கிராட்டில் (இப்போது செயின்ட் பீட்டர்ஸ்பர்க்) பிறந்தவர்கள். சோவியத் ஒன்றியத்தின் இறுதி ஆண்டுகளில், 10 ஆண்டுகள் சிறையில் கழித்தனர். பிரிகோஜினின் கூலிப்படையினர் உலகம் முழுவதும் ஒப்பந்தங்களை எடுத்துள்ளனர். குறிப்பாக வாக்னர் குழுவினர், தங்கம் அல்லது இயற்கை வளங்களின் பங்கு போன்ற இலாபகரமான கொடுப்பனவுகளுக்கு ஈடாக தேசிய தலைவர்கள் அல்லது போர்வீரர்களுக்கு பாதுகாப்பை வழங்குவதாகக் கூறப்படுகிறது.

துரோகம்..! ரஷ்யர்களின் முதுகில் குத்தப்பட்டுள்ளது! விடமாட்டேன்.! அதிபர் விளாடிமிர் புடின் விளாசல் !!

click me!