2 இளம்பெண்களுக்கு பாலியல் தொந்தரவு.. சிங்கப்பூரில் சிறையில் அடைக்கப்பட்ட இந்தியர்..

By Ramya s  |  First Published Jun 24, 2023, 4:34 PM IST

சிங்கப்பூரில் இளம் பெண்கள் 2 பேரை பாலியல் தொந்தரவு செய்த இந்திய சமையல்காரர் சிறையில் அடைக்கப்பட்டார்


சிங்கப்பூரில் இரண்டு இளம்பெண்களுக்கு பாலியல் ரீதியில் துன்புறுத்தல் கொடுத்த இந்தியாவைச் சேர்ந்த 44 வயது சமையல்காரருக்கு மூன்று மாதங்கள் நான்கு வாரங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட இளம்பெண்களை துன்புறுத்திய இரண்டு குற்றச்சாட்டுகளில் சுஷில் குமார் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சுரங்கப்பாதை ரயில் நிலையத்திற்கு அருகே பட்டப்பகலில் ஒரு இளம்பெண்ணை முதன்முதலில் பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் நடந்து 3 மாதங்களுக்கு பிறகு, மற்றொரு பெண்ணை காதலிப்பதாக கூறி, அவரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும், சுஷில் குமார் சிறுமிகளை கட்டிப்பிடிப்பதிலும், முத்தமிடுவதிலும் அல்லது தொடுவதிலும் அதிக நேரத்தை செலவிட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

 

“ தப்பான முடிவு எடுத்துட்டீங்க புடின்.. ரஷ்யாவுக்கு விரைவில் புதிய அதிபர்..” வாக்னர் குழு எச்சரிக்கை..

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் தேதி, பாதிக்கப்பட்ட பெண், பூன் கெங் ரயில் நிலையத்தில் இருந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, ​​சுஷில் குமார் அவரிடம் பேசுவதற்காக அவரிடம் சென்றுள்ளார். எனினும், அவர் ஸ்டேஷனுக்குச் செல்லும் வழியைக் கேட்கிறார் என்று பாதிக்கப்பட்ட பெண் நினைத்து, ரயில் நிலையத்திற்கு வழிகாட்டி உள்ளார். ஆனால், சுஷில் குமார் அப்பெண்ணின் அனுமதியின்றி அவரை தொட்டு பேசியதுடன், அப்பெண்ணின் வலது கன்னத்தில் முத்தமிட்டுள்ளார்.

பின்னர் மீண்டும் சிறுமியை கட்டிப்பிடித்து வலது கன்னத்தில் பலமுறை முத்தம் கொடுத்துள்ளார். தொடர்ந்து தனது கைப்பேசியைப் பயன்படுத்தி தன்னையும், அந்த இளம் பெண்ணையும், பல "செல்பி" புகைப்படங்களை எடுத்துள்ளார். பணம் தேவையென்றால் கூப்பிடலாம் என்று சொல்லிவிட்டு மீண்டும் ஓரிரு நிமிடங்களுக்கு அப்பெண்ணை கட்டி அணைத்து கன்னத்தில் முத்தமிட்டுள்ளார். சுஷில் குமார் சென்ற பிறகு, தனது வீட்டிற்கு ஓடி வந்து நடந்த சம்பவத்தை தனது தாயிடம் கூறினார். அன்று மாலை போலீசில் புகார் செய்யப்பட்டது.

எனினும் சுஹில் குமார் சிறுமிக்கு வாட்ஸ்அப் மூலம் இரண்டு குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும், இரண்டு முறை வீடியோ கால் செய்ய முயன்றதாகவும், அதில் இரண்டு எமோஜிகள் அடங்கிய மற்றொரு குறுஞ்செய்தியை அனுப்பியதாகவும் விசாரணையில் தெரியவந்தது. குமார் அடுத்த நாள் கைது செய்யப்பட்டார். எனினும் ஒரு நாள் கழித்து ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

சில மாதங்களுக்குப் பிறகு நவம்பர் 8 ஆம் தேதி மாலை, 19 வயதுடைய ஒரு பெண் வீட்டின் லிப்ட் லாபியில் காத்திருந்தார், அப்போது  சுஷில் குமார் அப்பெண்ணின் தோள்களை பிடித்துள்ளார். பின்னர் அப்பெண்ணை காதலிப்பதாக கூறி, அப்பெண்ணை தொட முயற்சித்துள்ளார். ஆனால் அந்த இளம்பெண் விலகிச் செல்ல முயன்ற போது, சுஷில் வலுக்கட்டாயமாக அப்பெண்ணை உரசிக் கொண்டே இருந்துள்ள்ளார்.

லிப்டில் ஏறிய சுஷில் குமார் அந்த இளம்பெண்ணின் கையை பிடித்த படியே, அவருடன் பேச்சை தொடர்ந்துள்ளார்.  அப்பெண்ணை காதலிப்பதாக திரும்பத் திரும்பச் சொல்லி, அவளை இரண்டு முறை முத்தமிட்டுள்ளார். இளம்பெண் 15வது மாடியை அடைந்ததும், லிப்டில் இருந்து வெளியேறி வீட்டிற்கு திரும்பி நடந்ததை பற்றி தனது தாயிடம் கூறினாள். இதுதொடர்பாக அளித்த புகாரின் பேரில், நவம்பர் 8 ஆம் தேதி சுஷில் குமார் அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார். 

இந்த சூழலில் இதுதொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம், பொது இடத்தில் தனது குற்றங்களைச் செய்யும் போது அநாகரிகமாக நடந்து கொண்டது மிகவும் அதிருப்தி அளிக்கிறது என்று நீதிபதி கூறினார். இதை தொடர்ந்து அவருக்கு மூன்று மாதங்கள் நான்கு வாரங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  இளம்பெண்களை பாலியல் ரீதியாக துன்புறத்திய குற்றச்சாட்டில் அவருக்கு 2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. 

H-1B விசா புதுப்பித்தலை அமெரிக்காவிலேயே மேற்கொள்ளலாம்! - பிரதமர் மோடி அறிவிப்பு!

click me!