வாழ்க்கையை மாற்றிய கனடா லாட்டரி! 35 மில்லியன் டாலர் வென்ற இவர் யாரு தெரியுமா?!

Published : Jun 24, 2023, 05:52 PM ISTUpdated : Jun 24, 2023, 06:22 PM IST
வாழ்க்கையை மாற்றிய கனடா லாட்டரி! 35 மில்லியன் டாலர் வென்ற இவர் யாரு தெரியுமா?!

சுருக்கம்

ஜூன் 6ஆம் தேதி நடத்திய லாட்டரி குலுக்கல்லில் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ஜெய் ஜெயசிங்க 35 மில்லியன் டாலர் வென்றுள்ளார்.

கனடா நாட்டில் ஓஎல்ஜி (OLG) என்ற லாட்டரி மற்றும் கேமிங் நிறுவனம் ஜூன் 6ஆம் தேதி நடத்திய லாட்டரி குலுக்கல்லில் சிறந்த லொட்டோ மேக்ஸ் பரிசாக இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ஜெய் ஜெயசிங்க 35 மில்லியன் டாலர் தொகையை வென்றுள்ளார்.

கனடாவில் விண்ட்சரில் வசிக்கும் ஜெய் ஜெயசிங்க தனக்குக் கிடைத்துள்ள ஜாக்பாட் பணத்தை வைத்து நாடு முழுவதும் பயணம் செய்து செலவழிக்க திட்டமிட்டுள்ளதாகச் சொல்கிறார். டொராண்டோவில் உள்ள ஓஎல்ஜியின் பரிசு மையத்தில் பேசிய அவர், "எனக்கு இதுபோன்ற வாய்ப்பு வரும் என்று நான் எப்போதும் நம்பினேன்," என்று கூறியுள்ளார்.

"என் மகள் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற ஒரு வாரத்தில் இந்த பரிசு கிடைத்துள்ளதால், டபுள் வெற்றி போல உணர்கிறேன்" என்றும் ஜெயசிங்க சொல்கிறார். ஜூன் 6ஆம் தேதி நடந்த குலுக்கலுக்கு அடுத்த நாள், ஜெயசிங்கவும் அவரது மனைவியும் வெற்றி பெற்றதை அறிந்துள்ளனர். "நான் இதை உண்மையில் எதிர்பார்க்கவில்லை" என்று ஜெயசிங்கவின் மனைவி கூறுகிறார்.

எகிப்து அல்-ஹகிம் மசூதிக்குச் செல்லும் பிரதமர் மோடி! 1000 ஆண்டு பழமையான மசூதியின் அரசியல் தொடர்பு என்ன?

சில்லறை வியாபாரியான ஜெயசிங், கிடைத்துள்ள தொகையைக் கொண்டு தனது குடும்பத்திற்கு புதிய வீடு வாங்கவும், மகளின் கல்விக்கு உதவி செய்யவும், பயணம் செய்யவும் திட்டமிட்டுள்ளார். புதிய கார் ஒன்றையும் வாங்க திட்டமிட்டுள்ளார். இதுமட்டுமின்றி ஒரு பகுதி தொகையை தொண்டு நிறுவனங்களுக்குக் கொடுக்கப்போவதாகவும் ஜெயசிங்க கூறுகிறார்.

"பரிசு கிடைத்திருப்பதை அறிந்து நான் உற்சாகத்தில் மூழ்கிவிட்டேன். மற்ற அனைத்தையும் மறைத்துவிட்டேன். எங்கள் எதிர்காலத்திற்கு இது ஒரு ஆசீர்வாதம். நான் கனடாவுக்கு வர முடிந்ததற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இந்த முடிவு என் வாழ்க்கையை மாற்றும்."

தாஜ்மஹாலையே பின்னுக்கு தள்ளிய உலகின் விலையுயர்ந்த பங்களா - அதோட விலை என்னனு தெரியுமா?

PREV
click me!

Recommended Stories

மதக் கூட்டங்களில் பெண் ஜிஹாதிகள்..! இந்தியாவிற்கு எதிராக படுபயங்கர சதித்திட்டம்..! எல்லையில் தீவிர பாதுகாப்பு..!
இலங்கைக்கு உதவிய தமிழகம்: புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 950 டன் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு