pm narendra modi:ரஷ்ய அதிபரிடம் பிரதமர் மோடி சொன்னது கரெக்ட்தான்! பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் பாராட்டு

By Pothy Raj  |  First Published Sep 21, 2022, 8:48 AM IST

ரஷ்ய அதிபர் விளாதமிர் புதினிடம் உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக, போர் செய்ய சரியான நேரம் இல்லை என்று பிரதமர் மோடி பேசியது சரியானதுதான் என்று பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.


ரஷ்ய அதிபர் விளாதமிர் புதினிடம் உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக, போர் செய்ய சரியான நேரம் இல்லை என்று பிரதமர் மோடி பேசியது சரியானதுதான் என்று பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

உஸ்பெகிஸ்தானில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் ரஷ்ய அதிபருடன் பிரதமர் மோடி பேசினார். அப்போது, “ உக்ரைனில் போர் செய்வதற்கு ஏற்ற சகாப்தம் இதுவல்ல. அமைதியின் வழியை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல நாம் இருவருக்கும் பேசுவதற்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது. 

Tap to resize

Latest Videos

இனி விசா இல்லாமலே ரஷ்யா போகலாம்.. இந்தியர்களுக்கு சூப்பர் நியூஸ் சொன்ன ரஷ்ய அதிபர் புடின்.!

பல பத்தாண்டுகளாக இந்தியாவும், ரஷ்யாவும் நட்புறவோடு வந்துள்ளன. இந்தியா, ரஷ்யா உறவுகள் குறித்து பலமுறை இருவரும் தொலைப்பேசியில் பேசியுள்ளோம்.உணவு, எரிபொருள், உரம், பாதுகாப்பு தொடர்பான சிக்கல்களைக் களைய வழிகளை நாம் தேட வேண்டும். உக்ரைனில் இருந்து இந்திய மாணவர்களை இந்தியாவுக்கு அனுப்ப உதவிய உக்ரைன், ரஷ்யா நாடுகளுக்கு நன்றி”   என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

மெக்சிகோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! அலறியடித்துக் கொண்டு பொதுமக்கள் சாலையில் தஞ்சம்! சுனாமி எச்சரிக்கை.!

ரஷ்ய அதிபரிடம் போர் செய்வதற்கான நேரம் இதுவல்ல என்று பிரதமர் மோடி பேசியதை அமெரிக்க ஊடகங்கள் பாராட்டி வருகின்றன. சிஎன்என், வாஷிங்டன் போஸ்ட், தி நியூயார்க் டைம்ஸ் நாளேடு ஆகியவை பிரதமர் மோடியைப் பாராட்டி செய்தி வெளியிட்டுள்ளன

இந்நிலையில் நியூயார்க்கில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக்கூட்டம் நடந்து வருகிறது. இதில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் நேற்று பங்கேற்று பேசுகையில் “ உக்ரைன் போர் தொடர்பாக ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினிடம் உக்ரைனுடன் போர் செய்ய இது உகந்த நேரம் அல்ல என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பேசியது சரியானதுதான்.

 பிரதமர் மோடிக்கு அமெரிக்கா பாராட்டு!ரஷ்யாவிடம் போர் நிறுத்தம் பற்றிய பேச்சுக்கு புகழாரம்

மேற்கத்திய நாடுகளுக்கு எதிராகவும், கிழக்கு நாடுகளுக்கு எதிராக இருக்கும் மேற்கத்திய நாடுகளையும் பழிவாங்குவதற்கு உகந்த நேரம் இல்லை. சமமான இறையாண்மை கொண்ட நாடுகள் கூடுவதற்கான நேரம். நாம் எதிர்கொள்ளும் சவால்களை ஒன்றாகச் சமாளிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் ஜேக் சல்லிவனும், பிரதமர் மோடி ரஷ்ய அதிபரிடம் பேசியது குறித்து பாராட்டுத் தெரிவித்துள்ளார். அவர் குறிப்பிடுகையில் “ரஷ்ய அதிபரிடம் உக்ரைன் போர் குறித்து இந்திய பிரதமர் மோடி பேசியது, அவர் எதில் நம்பிக்கை வைத்துள்ளாரோ அது சரி என்பதை குறிக்கிறது என்று நான் நினைக்கிறேன். பிரதமர் மோடி பேசிய விதத்தை அமெரிக்கா வரவேற்கிறது, பாராட்டுகிறது.

ரஷ்யாவுடன் நீண்டகாலம் நட்பு வைத்திருந்தபோதிலும் பிரதமர் மோடி உக்ரைன் போர் குறித்த கருத்தை துணிச்சலாகக் கூறி, போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டிய நேரம்” எனத் தெரிவித்தார்
 

click me!