விட்டுப்போன உறவுகள் புதுப்பிக்கப்படுமா? பிரதமர் மோடியின் கிரீஸ் பயணம் என்ன கூறுகிறது?

By Dhanalakshmi G  |  First Published Aug 22, 2023, 4:20 PM IST

மறைந்த பிரதமர் இந்திரா காந்திக்குப் பின்னர் கிரீஸ் செல்லவிருக்கும் முதல் இந்தியப் பிரதமர் என்ற பெயரை பிரதமர் மோடி தட்டிச் செல்கிறார். கிரீஸ் நாட்டிற்கு இந்திரா காந்தி 1983ஆம் ஆண்டு சென்றுவந்த பின்னர் 40 ஆண்டுகள் கழித்து பிரதமர் மோடி வரும் 25ஆம் தேதி அந்த நாட்டிற்கு செல்கிறார்.


மோடி எகிப்து பயணம்: 
பிரதமர் மோடி தனக்கு முந்தைய பிரதமர்கள் பல ஆண்டுகள் செல்லாமல் இருந்த  நாடுகளுக்கு சென்று நாட்டின் உறவை பலப்படுத்தி வருகிறார். அந்த வகையில் கடந்த ஜூன் மாதம் எகிப்து நாட்டிற்கு சென்று இருந்தார். 26 ஆண்டுகளுக்கு முன்பு எகிப்து நாட்டில் நடந்த ஷர்ம் இல் ஷேக் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சென்று இருந்தார். 

மோடி டென்மார்க் பயணம்:
இதேபோல் கடந்த இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் டென்மார்க் நாட்டிற்கு கடந்த மே மாதம் இந்தியப் பிரதமர் மோடி சென்று இருந்தார். இவருக்கு முன்பு கடந்த 2002ஆம் ஆண்டில் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் டென்மார்க் சென்று இருந்தார். மே மாதத்தில் இதுவரை எந்தப் பிரதமர்களும் செல்லாத பப்புவா நியூ கினியா நாட்டுக்கு பிரதமர் மோடி சென்று இருந்தார். பிரதமர் பயணத்தின் மூலம் உடனடியாக எந்த பலன்களும் கிடைக்காவிட்டாலும், நாடுகளுக்குள் உறவை பலப்படுத்திக் கொள்ள உதவும் என்று அதிகாரமட்டத்தில் கூறப்பட்டது.

Tap to resize

Latest Videos

பிரிக்ஸ் மாநாடு: பிரதமர் மோடியை வரவேற்க தயாராகும் தென் ஆப்பிரிக்கா!

வெளியுறவுத்துறை அமைச்சர் அல்லது துணை ஜனாதிபதியின் முன்கூட்டிய வருகைகளால் உறவுகளை புதுப்பிப்பதற்கான தருணம் ஏற்படுகிறது. இதைத் தொடர்ந்து பிரதமரின் வருகை என்பது இருநாடுகளுக்கும் இடையில் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுவதற்கு, உறவுகளை வலுவாக்க பயன்படுகிறது என்று அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர். 

மோடி கிரீஸ் பயணம்:
பிரதமரின் பயணத்தால் சிறிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகளும் அங்கு வசிக்கும் இந்தியர்களும் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு மறைகிறது. வெளிநாட்டு பயணத்தில் பிரதமர் மோடி இந்திய வம்சாவழியினரை சந்தித்து பேசி உரையாடுகிறார். எகிப்து, டென்மார்க் மற்றும் பப்புவா நியூ கினியாவில் இந்திய சமுதாயத்தினரை சந்தித்துப் பேசினார். தென் ஆப்ரிக்கா பயணத்தை முடித்துக் கொண்டு கிரீஸ் செல்லும்போது, அங்கு வாழும் இந்தியர்கள் பிரதமர் மோடி சந்திக்கிறார். 

பிரிக்ஸ் மாநாட்டில் மோடி, ஜி சந்திப்பு? எல்லையில் பதற்றம் தணிக்க இருதரப்பில் பேச்சுவார்த்தை!!

இதுதொடர்பாக வெளியுறவுத்துறை வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், ''கிரீஸ் நாட்டின் கடல்வழி போக்குவரத்து, பாதுகாப்புத்துறை, வர்த்தகம் ஆகியவற்றுடன் இந்தியா சமீப ஆண்டுகளில் ஒத்துழைப்பை நல்கி வருகிறது. கிரீஸ் நாட்டில் இந்தியா முதலீடும் செய்து வருகிறது. அங்கு வாழும் மக்களுடன் இணைப்பு ஏற்படுத்தப்படுகிறது. கிரீஸ் நாட்டின் பிரதமர் மிட்சோடகிஸ்சை பிரதமர் மோடி சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பு இருநாடுகளின் உறவுகளை பலப்படுத்துவதற்கு ஆதாரமாக இருக்கும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

click me!