
chinese spy balloon montana: அமெரிக்காவின் மான்டோனா வான் பரப்புக்குள் சீனாவின் ராட்சத உளவு பலூன் புகுந்துள்ளது. இதனால் முக்கியமான இடங்களை பாதுகாப்பாக வைக்கவும் என்று அமெரிக்க ராணுவ அமைப்பான பென்டகன் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சீனாவின் உளவு பலூன், 3 பேருந்துகள் அளவுக்கு பெரிதாக இருப்பதாக பென்டகன் தெரிவித்துள்ளது. சீனாவுக்கு அமெரிக்காவின் வெளியுறவு துறை அமைச்சர் ஆண்டனி பிளின்கின் பயணிக்க இருக்கும் நிலையில் இந்த உளவு பலூன் அமெரிக்க வான்வெளிக்குள் வந்துள்ளது.
அதிபர் ஜோ பைடன் அழைப்பை ஏற்று அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி; ஏன்? எதற்காக?
இது குறித்து பென்டகன் செய்தித்தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் பாட் ரைடர் கூறுகையில் “ அமெரிக்க வான்வெளியில் உயர்ந்த வான்பரப்பில் உளவு பலூன் ஒன்றை அமெரி்க்க ராணுவம் கண்டுபிடித்துள்ளது.
அந்த பலூனின் திசையையும், செல்லும் பகுதியையும் ராடாரில் கண்காணித்து வருகிறோம். அந்த பலூன் மான்டோனா பகுதியில் கண்டுபிடித்தோம். அந்த பலூன் 3 பேருந்து அளவுக்கு பெரிதாக இருக்கிறது.
இந்த பலூன் கண்டுபிடிக்கப்பட்ட உடன், அமெரிக்க அரசுக்கு எச்சரிக்கை செய்து, அனைத்து வகையான ரகசிய ஆவணங்களையும் பாதுகாக்க எச்சரிக்கை செய்துள்ளம்.
இந்த பலூன் அமெரிக்காவின் வர்த்தக வான்பரப்புக்குள் வரவில்லை, விமானப் போக்குவரத்துக்கும் இடையூறு செய்யவில்லை. மக்களுக்கும், ராணுவத்துக்கும் எந்த இடையூரும், தொந்தரவும் செய்யவில்லை. அமெரிக்க அதிபர் ஜோ பிடனிடம் இந்த பலூன் குறித்து எடுத்துக் கூறப்பட்டது” எனத் தெரிவித்தார்.
பாகிஸ்தான் பெஷாவரில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்து 28 பேர் பலி; 120 பேர் காயம்!!
அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் தரப்பில் கூறுகையில் “ அவசரப்பட்டு எந்த நடவடிக்கையும் எடுத்து பலூனை சிதைக்க வேண்டாம் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம். அவ்வாறு சிதைத்தால் மக்களுக்கு ஏதாவது பாதிப்பை ஏற்படுத்தலாம்.
தற்போது, இந்த பலூன் நுண்ணறிவு சேகரிப்பு கண்ணோட்டத்தில் கண்காணித்து வருகிறோம். வெளிநாட்டு உளவுத்துறை சேகரிப்பில் இருந்து முக்கியமான தகவல்களை பாதுகாக்க நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம்” என தெரிவித்துள்ளனர்.