விபரீதமாக முடிந்த கண்ணாமூச்சி விளையாட்டு! 15 சிறுவனின் பரிதாப நிலை!

By SG Balan  |  First Published Jan 30, 2023, 6:53 PM IST

வங்கதேசத்தில் நண்பர்களுடன் கண்ணாமூச்சி விளையாடும்போது கண்டெய்னருக்குள் போய் ஒளிந்துகொண்ட சிறுவன் 3,500 கி.மீ.க்கு அப்பால் உள்ள மலேசியாவில் இருந்து மீட்கப்பட்டுள்ளார்.


வங்கதேசத்தில் நண்பர்களுடன் கண்ணாமூச்சி விளையாடும்போது கண்டெய்னருக்குள் போய் ஒளிந்துகொண்ட சிறுவன் 3,500 கி.மீ.க்கு அப்பால் உள்ள மலேசியாவில் இருந்து மீட்கப்பட்டுள்ளார்.

வங்கதேசத்தின் சிட்டகாங் நகர துறைமுகப் பகுதியில் கடந்த்த ஜனவரி 12ஆம் தேதி 15 வயது சிறுவன் ஃபஹிம் நண்பர்களுடன் கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடிக்கொண்டிருந்தார். ஒளித்துகொள்வதற்காக அங்கிருந்த கண்டெயினர் ஒன்றினுள் சென்ற ஃபஹிம் அப்படியே உறங்கிவிட்டார்.

Latest Videos

undefined

ஃபஹிம் உள்ளே தூங்குவதை அறியாமல் கண்டெயினர் மலேசியாவுக்குப் புறப்பட்டுவிட்டது. இதனால் ஃபஹிம் அந்த கண்டெயினருக்குள்ளேயே சிக்கிக்கொள்ளும்படி நேர்ந்துவிட்டது.

Blast In Pakistan Mosque: பாகிஸ்தான் பெஷாவரில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்து 28 பேர் பலி; 120 பேர் காயம்!!

ஆறு நாட்களாக கண்டெயினருக்குள்ளேயே பசியோடு இருந்ததில் காய்ச்சலும் வந்துவிட்டது. பின்னர் ஜனவரி 17ஆம் தேதி கண்டெயினர் மலேசியா சென்றதும், அங்கிருந்த துறைமுக அதிகாரிகள் கண்டெயினருக்குள் இருந்த சிறுவனைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

சிறுவனின் உடல்நிலை மோசமாக இருந்ததால் உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்து உரிய சிகிச்சையும் அளிக்கப்பட்டது. மலேசிய காவல்துறையினர் முதலில் சிறுவனை யாரேனும் கடத்தி வந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தினர். பின், விளையாடும்போது கண்டெயினருக்குள் ஒளிந்துகொண்ட சிறுவன் அப்படியே தூங்கியதால் உள்ளேயே சிக்கிகொள்ள நேர்ந்ததை அறிந்துகொண்டனர்.

உடனே சிறுவனின் உடல்நிலை தேறியதும் வங்கதேசத்துக்கு பத்திரமாக அனுப்பிவைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அந்நாட்டு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Princess Diana Gown: கண்ணைப் பறிக்கும் இளவரசி டயானாவின் கவுன் ரூ.5 கோடிக்கு ஏலம்!

இந்த விபரீத சம்பவம் நடப்பது முதல் முறை அல்ல. கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபரிலும் வங்கதேச துறைமுகத்தில் இருந்த மலேசியா வந்த கண்டெயினர் ஒன்றில் அழுகிய நிலையில் இருந்த இளைஞரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

click me!