Blast In Pakistan Mosque: பாகிஸ்தான் பெஷாவரில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்து 28 பேர் பலி; 120 பேர் காயம்!!

By Dhanalakshmi GFirst Published Jan 30, 2023, 3:24 PM IST
Highlights

பாகிஸ்தானின் வடமேற்கில் இருக்கும் பெஷாவர் நகரில் உள்ள மசூதியில் ஒன்றில் இன்று (திங்கள்கிழமை) சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் 25 பேர் உயிரிழந்தனர். 120 பேர் காயமடைந்தனர்.

இன்று மதியம் தொழுகையின்போது, தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியவர் முன் வரிசையில் இருந்ததாகவும்,  அவர் தன்னைத்தானே வெடிக்கச் செய்ததாகவும் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக ஜியோ நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. பெஷாவரின் லேடி ரீடிங் மருத்துவமனையின் (எல்ஆர்சி) செய்தித் தொடர்பாளர் கூறுகையில், காயமடைந்தவர்கள் மேல் சிசிக்கைக்காக மாற்றப்படுகிறார்கள். பகுதி முழுவதுமாக சீல் வைக்கப்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ்கள் மட்டுமே உள்ளூருக்குள் செல்ல அனுமதிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார். முன்னதாக ஜனவரி 22 அன்று, பெஷாவரில் உள்ள படாபர் காவல் நிலையத்திற்கு அருகே வெடிகுண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததாக காவல்துறையை மேற்கோள் காட்டி ஜியோ நியூஸ் தெரிவித்துள்ளது. 

பாகிஸ்தான் தலிபான்கள் இந்த தாக்குதலை நடத்தி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கு முன்பும் இதேபோன்ற தாக்குதலை இவர்கள் நடத்தி இருப்பதாக தெரிய வந்துள்ளது. பாகிஸ்தான் தலிபான்கள் தெரீக் இ தலிபான் பாகிஸ்தான் அல்லது டிடிபி என்று அழைக்கப்படுகின்றனர். இவர்கள் தனித்து செயல்பட்டாலும், ஆப்கானிஸ்தான் தலிபான்களுடன் நெருக்கமாக இருப்பவர்கள். ஆப்கானிஸ்தானில் நடந்த 20 ஆண்டுகள் போருக்குப் பின்னர் அமெரிக்க மற்றும் நேட்டோ போர் படைகள் வாபஸ் பெற்றன. இதையடுத்து அந்த நாட்டை தலிபான்கள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். 

Princess Diana Gown: கண்ணைப் பறிக்கும் இளவரசி டயானாவின் கவுன் ரூ.5 கோடிக்கு ஏலம்!

பாகிஸ்தானிலும் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக டிடிபி தீவிரவாதிகள் செயல்பட்டு வருகின்றனர். இவர்களது முக்கிய நோக்கமே, பாகிஸ்தானிலும் இஸ்லாமிய சட்டங்களை கட்டாயமாக்க வேண்டும் என்பதுதான். மேலும், பாகிஸ்தான் சிறையில் இருக்கும் தங்களது ஆட்களை விடுவிக்க வேண்டும், பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளில் ராணுவ பாதுகாப்பை குறைக்க வேண்டும் என்பதுதான்.  இதனால், தொடர்ந்து பாகிஸ்தான் அரசுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.

Britain MP Slams BBC:பிரதமர் மோடிக்கு ஆதரவு! பிபிசி சேனலை வெளுத்து வாங்கிய பிரிட்டன் எம்.பி

click me!