சீனாவுக்கு தண்ணி காட்டிய அமெரிக்கா; பிலிப்பைன்ஸை சுற்றி தைவான் சென்றடைந்தார் நான்சி பெலோசி!!

By Narendran S  |  First Published Aug 2, 2022, 8:12 PM IST

நான்சி பெலோசியின் விமானம் சீனா ராணுவத்தின் குறுக்கீடுகளை தவிர்க்க பிலிப்பைன்ஸ் கடல் பகுதி வழியே சுற்றி தைவானுக்கு சென்றடைந்தது. 


தைவான் செல்லும் பெலோசியின் விமானம் சீன ராணுவத்தின் குறுக்கீடுகளை தவிர்க்க பிலிப்பைன்ஸ் கடல் பகுதி வழியே சுற்றி தைவான் சென்றடைந்தது. கடந்த 1949ம் ஆண்டு சீனாவில் நடந்த உள்நாட்டுப் போரில் கம்யூனிஸ்ட்கள் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து சீனாவும் தைவானும் பிரிந்தன. இருப்பினும் தைவானுக்கு சீனா உரிமை கொண்டாடி வருகிறது. தைவான் சுதந்திரம் குறித்து எந்த நாடு பேசினாலும், வெளிநாட்டு தலைவர்கள் சென்றாலும் சீனா கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. இந்நிலையில் அமெரி்க்க பிரதிநிதிகள் சபைத் தலைவர் நான்சி பெலோசி ஆசிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

இதையும் படிங்க: போருக்கு தயாராகும் சீனா; தைவான் வரும் நான்சி பெலோசியை வரவேற்க சிவப்பு பட்டுக் கம்பளம் தயார்!!

Tap to resize

Latest Videos

சிங்கப்பூருக்கு வந்த நான்சி பெலோசி அங்கு பயணத்தை முடித்துக்கொண்டு மலேசியாவுக்கு சென்றார். அங்கிருந்து தைவான் சென்றடைந்தார். அவருக்கான சிவப்பு பட்டுக் கம்பள வரவேற்பு தைவானில் தயாராகி உள்ளது. அமெரிக்காவின் உயரிய பொறுப்பில் இருக்கும் ஒருவராக பெலோசி 25 ஆண்டுகளுக்குப் பின்னர் தைவானுக்கு சென்றுள்ளார். ஆனால் நான்சி பெலோசி தைவான் செல்வதற்கு சீனா கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. மேலும் தைவானுக்கு பெலோசி வரும்போது, அந்த நாட்டின் வான் எல்லையில் சீனா தனது போர் விமானங்களை பறக்கவிட்டு தடைகளை ஏற்படுத்தலாம் என்று கூறப்பட்டது.

இதையும் படிங்க: நான்சி பெலூசி தைவான் சென்றால் அதற்குரிய விலை கொடுப்பீர்கள்: அமெரி்க்காவுக்கு சீனா எச்சரிக்கை

மேலும், தைவான் தீபகற்பத்தை சுற்றிலும் சீன ராணுவம் பயிற்சியில் ஈடுபடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் பெலோசியின் விமானம் சீன கடல் பகுதி வழியாக தைவானுக்கு செல்லவில்லை. சீன ராணுவத்தை தவிர்க்க வேண்டும் என்பதால், பிலிப்பைன்ஸ் கடல் பகுதி வழியே சுற்றி தைவானுக்கு நான்சி பெலோசி சென்ற விமானம் சென்றடைந்தது. மேலும் இதன் மூலம் சீன ராணுவத்தின் குறுக்கீடுகளைத் தவிர்க்க முடியும் என்று முன் கூட்டியே அமேரிக்கா திட்டமிட்டுள்ளது. அதன்படி பிலிப்பைன்ஸை சுற்றி தைவான் சென்றடைந்தார் நான்சி பெலோசி. 

தைவானுக்கு நான்சி பெலோசி வருகையை முன்னிட்டு, அந்த நாட்டின் கிழக்குப் பகுதியில் இருக்கும் கடல் பகுதியில் அமெரிக்காவின் ஏவுகணை தாங்கிக் கப்பல் உள்பட நான்கு போர்க் கப்பல்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதனிடையே சீன ராணுவ அதிகாரிகள் மற்றும் படைப்பிரிவில் இருப்பவர்கள் யாரும் விடுப்பு எடுக்கக் கூடாது என்று சீனா எச்சரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பதற்றமான இச்சூழலில், சீன ராணுவமும் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

தைவானுக்கு மிக அருகில் உள்ள சீனாவின் புஜியான் மாகாணத்தில் (1,000 கிமீ தொலைவில் இலக்குகளை தாக்கும் திறன் கொண்டவை) DF-16 என்ற லாஞ்சர்களை சீன ராணுவம் நிறுத்தி வரும் வீடியோ வெளியாகி உள்ளது.

click me!