அமெரிக்‍க எழுத்தாளர் பால் பீட்டிக்‍கு மேன்புக்‍கர் பரிசு அறிவிப்பு!

Asianet News Tamil  
Published : Oct 27, 2016, 04:50 AM ISTUpdated : Sep 19, 2018, 12:45 AM IST
அமெரிக்‍க எழுத்தாளர் பால் பீட்டிக்‍கு மேன்புக்‍கர் பரிசு அறிவிப்பு!

சுருக்கம்

அமெரிக்‍க எழுத்தாளர் Paul Beatty எழுதிய The Sellout என்ற நாவலுக்‍கு சிறந்த புதினத்திற்கான மேன் புக்‍கர் பரிசு அறிவிக்‍கப்பட்டுள்ளது.

ஆங்கில மொழியில் எழுதப்படும் சிறந்த முழுநீள புதினங்களுக்கு வழங்கப்படும் மேன்புக்‍கர் பரிசு இந்த ஆண்டு அமெரிக்‍காவைச் சேர்ந்த நகைச்சுவை எழுத்தாளர் Paul Beatty-க்‍கு அறிவிக்கப்பட்டுள்ளது. 54 வயதான Paul Beatty எழுதிய The sellout என்ற புத்தகத்திற்காக, லண்டனில் உள்ள பிரபல Guildhall கட்டடத்தில் இப்பரிசு அறிவிக்‍கப்பட்டது. அவருக்‍கு பரிசுத்தொகையாக 50 ஆயிரம் பவுண்ட் வழங்கப்படும். மேன்புக்‍கர் பரிசுபெறும் முதல் அமெரிக்‍கர் என்ற பெருமையும் இவரையே சாரும்.

அமெரிக்‍காவில், லாஸ்ஏஞ்சலீஸில் 1962ல் பிறந்த Paul, Slumberland, Tuff மற்றும் The White Boy Shuffle என 3 நாவல்களை ஏற்கெனவே எழுதி பிரபலமடைந்தவர். தற்பொழுது அவர் நியூயார்க்‍கில் வசித்து வருகிறார். இவரது நாவலை வெளியிட்ட one world வெளியீட்டாளருக்‍கு தொடர்ந்து இரண்டாவது முறையாக இப்பரிசு கிடைத்துள்ளது. இதே வெளியீட்டாளரின் A Brief History of Seven Killings என்ற மற்றொரு புத்தகம் கடந்த ஆண்டு மேன்புக்‍கர் பரிசு வென்றது குறிப்பிடத்தக்‍கது.

PREV
click me!

Recommended Stories

ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியது.. 100 ராணுவ வீரர்கள் கதி என்ன? அதிர்ச்சி தகவல்!
5 நாட்கள் போர் ஒத்தி வைப்பு.. யூ-டர்ன் அடித்த டிரம்ப்..! ஈரானிடம் இறங்கி வரும் அமெரிக்கா..?