எந்திரன் படம் காட்சி போல் பரபரப்பு – இரும்பை உடலில் ஒட்டி கொள்ளும் காந்த சிறுவன்

Asianet News Tamil  
Published : Oct 27, 2016, 01:15 AM ISTUpdated : Sep 19, 2018, 12:44 AM IST
எந்திரன் படம் காட்சி போல் பரபரப்பு – இரும்பை உடலில் ஒட்டி கொள்ளும் காந்த சிறுவன்

சுருக்கம்

இரும்பு பொருட்களை உடலில் தானாகவே சிறுவனுக்கு ஒட்டி கொள்கிறது. எந்திரன் படத்தில் வரும் காட்சியை போல், இச்சம்பவம் நடந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தென்கிழக்கு ஐரோப்பாவின் போஸ்னியா மற்றும் ஹெர்ஸிகோவினா நாட்டினை சேர்ந்தவர் எர்மான் டெலிக் (5). கடந்த சில நாட்களாக, அவனது உடலில், எரிச்சல் இருப்பதாக பெற்றோரிடம் கூறியுள்ளான். அதற்கு உஷ்னம் காரணமாக இருக்கும் என எண்ணிய அவர்கள், குளிர்ச்சியான உணவு பொருட்களை சாப்பிட கொடுத்தனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக எர்மான் டெலிக்கின் உடலில், எந்த இரும்பு பொருட்களை வைத்தாலும், ஒட்டி கொள்கிறது. அருகில் இருக்கும் சிறிய இரும்பு துண்டுகள் தானாகவே, மகனின் உடலில் ஒட்டி கொண்டதை பார்த்த பெற்றோர், அதிர்ச்சியடைந்தனர். இந்த சம்பவம், அப்பகுதி முழுவதும் காட்டுத் தீப்போல பரவியது.

இதுபற்றி தகவல், பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு சென்றது. அதனை உறுதி செய்வதற்காக தொலைக்காட்சி நிருபர் ஒருவர், சிறுவனின் உடலில் 3 ஸ்டிக் ஸ்பூன்களும் , 13 நாணயங்களை அவருடைய மார்பகத்திலும் மேலும் சில உலோகப் பொருட்களை வைத்தார்.

அவை அனைத்தும், கீழே விழாமல் அப்படியே நின்றன இதைக் கண்ட தொலைக்காட்சி நிருபர் ஆச்சரியத்தில் உறைந்து போனார். மேலும் இது போன்ற நிகழ்வு ஏற்படும் போது அவர்கள் கண்ணாடி, பீங்கான், மரம் அல்லது பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவற்றையும் அவர்களால் ஈர்க்க முடியும் என்றும் கூறப்படுகிறது.

எந்திரன் படத்தில் ரோபோவாக நடித்த ரஜினிகாந்த்தை தாக்க, சிலர் கத்தி, அரிவாள் உள்ளிட்ட இரும்பு ஆயுதங்களை கொண்டு வருவார்கள். ஆனால், காந்த சக்தியால், அந்த ஆயுதங்கள் தானாகவே ரஜியிடம் வந்துவிடும். அதேபோல், கீழே கிடக்கும் இரும்பு பொருள் சிறுவனின் உடலில் தானாக வந்து ஒட்டி கொள்ளும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து அவரது பெற்றோர்கள் மருத்துவர்களிடம் அழைத்துச் சென்றாலும், இது வினோதமான செயல் என்றும் அவர்களே குழப்பத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் ரஷ்யாவை சேர்ந்த னிகோலை கிரியகிலேயாசென்கோ (12) என்ற சிறுவனுக்கு இதே குணாதிசயம் இருந்ததாக கூறப்படுகிறது.
 

PREV
click me!

Recommended Stories

ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியது.. 100 ராணுவ வீரர்கள் கதி என்ன? அதிர்ச்சி தகவல்!
5 நாட்கள் போர் ஒத்தி வைப்பு.. யூ-டர்ன் அடித்த டிரம்ப்..! ஈரானிடம் இறங்கி வரும் அமெரிக்கா..?