ஹிலாரி கிளிண்டனுக்கு இன்று பிறந்த நாள்..!!!!

Asianet News Tamil  
Published : Oct 27, 2016, 01:43 AM ISTUpdated : Sep 19, 2018, 12:44 AM IST
ஹிலாரி கிளிண்டனுக்கு இன்று பிறந்த நாள்..!!!!

சுருக்கம்

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் ஹிலாரி கிளிண்டன் பிறந்த தினம் இன்று. இவர் அக்டோபர் 26, 1947-ம் ஆண்டு பிறந்தார். 68 வயதாகும் இவர், அமெரிக்காவின் 42-வது அதிபரான பில் கிளிண்டனின் மனைவியாவாா்.

அமெரிக்காவின் “முதல் சீமாட்டி” என்று அழைக்கப்படும் இவரின் வாழ்க்கை, பல்வேறு சர்ச்சைகளையும் சாதனைகளையும் கொண்டது. பள்ளி பருவத்தில் அரசியலில் நாட்டாம் கொண்ட இவர், அதன் காரணமாக குடியரசுக் கட்சியால் ஈர்க்கப்பட்டு கட்சியில் பரப்புரை செய்து வந்தார். 

பின்னர் நாளடைவில் 1968-ல் ஜனநாயக கட்சியில் இணைந்தார். 1973-ல்  சட்ட கல்லூரியில் பட்டம் பெற்ற ஹிலாரி 1975-ம் ஆண்டு சக மாணவரான பில் கிளிண்டனையே மணம்முடித்தார்.

திருமணத்திற்கு பிறகு இவரது வளர்ச்சியில் பில் கிளிண்டன் முக்கிய பொறுப்பு வகித்தார். பின்னர் தொடர்ந்து பெண்களுக்காக குரல் கொடுப்பதில் இவர் முக்கிய பங்காற்றினார். 2000-ம் ஆண்டு பல விமர்சனங்களுக்கும் எதிர்ப்புகளுக்கும் மத்தியில் நியூயார்க் செனட்டராக தேர்வானார் ஹிலாரி. இது அவரது அரசியல் வாழ்க்கைக்கு ஒரு திருப்புமுனையாக இருந்தது.

அரசியல் அனுபவத்தோடு நியூயார்க் செனட்டராக களம் இறங்கிய ஹிலாரி, கடந்த 2008-ம் ஆண்டிலேயே ஜனநாயக கட்சியில் அதிபர் வேட்பாளருக்கான போட்டியில் களம் கண்டார். எனினும் பராக் ஒபாமாவே வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார். இருந்தபோதும் அடுத்த கட்டமாக வெளியுறவுத்துறை அமைச்சர் பதவியில் தேர்வு செய்யப்பட்டார் ஹிலாரி.

வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தபோது இதுவரை எந்த ஒரு வெளியுறவுத்துறை அமைச்சரும் செய்திடாத வகையில், 112 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார் . இதில் தனக்கு கிடைத்த அனுபவங்களை ‘ஹார்ட் சாய்ஸ்’ என்ற பெயரில் புத்தகமாகவும் ஹிலாாி கிளிண்டன் வெளியிட்டிருக்கிறார்.

தற்போது அமெரிக்க அதிபர் தேர்தலில் ‘முக்கிய கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராகும் பெண்’ என்ற பெருமையை பெற்றுள்ள அவர், அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் களத்தில் இறங்கியுள்ளார். எனினும் அன்றில் இருந்து இன்றுவரை மனித உரிமைகளுக்காகவும் பெண் உரிமைக்காகவும் குரல் கொடுப்பதை நிறுத்தவில்லை. அமொிக்க அதிபா் தோ்தலில் ஹிலாாி கிளிண்டன் வெற்றி பெற்றால், அந்நாட்டின் முதல் பெண் அதிபா் என்ற சாதனையையும் அடைவாா். ஹிலாாிக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

PREV
click me!

Recommended Stories

ஈரான் வைத்த செக்..! 48 மணி நேரத்தில் 3 போர்க்கப்பல்கள் அவுட்..! அமெரிக்காவின் பின்வாங்கல்!
ஈரான் 2 நிமிடங்களில் சாம்பலாகும் ..! உலகையே அதிரவைக்கும் டிரம்ப்..!