தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களின் செல்போன் எண்ணுக்கு ஆப்பு... அரசின் தடாலடி அறிவிப்பு...!

By Kanimozhi Pannerselvam  |  First Published Jun 12, 2021, 5:50 PM IST

பாகிஸ்தான் மாநிலத்தின் பஞ்சாப் மாகாணத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களின் செல்போன் எண்கள் முடக்கப்படும் என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. 


கொரோனா முதல் அலையைப் போலவே இரண்டாவது அலையும் கோரதாண்டவம் ஆடி வருகிறது. சொல்லப்போனால் முதல் அலையை விட இரண்டாவது அலையில் தான் பாதிப்பு மற்றும் உயிரிழப்பின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. கொரோனா முதல் அலையை சமாளிக்க முடியாமல் திண்டாடிய உலக நாடுகள் அனைத்தும் தங்களுடைய விஞ்ஞானிகள், மருத்துவ நிபுணர்கள் மூலமாக தடுப்பு மருந்து கண்டறிய முயன்று, பல நாடுகள் அதில் வெற்றியும் கண்டன. 

Tap to resize

Latest Videos

தற்போது கொரோனா தொற்றிலிருந்து தப்பிக்க வேண்டும் என்றால் தடுப்பூசி செலுத்திக் கொள்வது மட்டுமே ஒரே தீர்வு என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் சிலர் தடுப்பூசி  செலுத்திக் கொள்ள தயக்கம் காட்டி வருகின்றனர். பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் கடந்த பிப்ரவரி 2ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதில் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்ட சுமார் 3 லட்சம் பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வரவில்லை என்பது தெரியவந்துள்ளது. 

இதையடுத்து பாகிஸ்தான் மாநில பஞ்சாப் மாகாண சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் யாஸ்மின் ரஷீத் தலைமையில் லாகூரில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் உள்ள குடிமகன்களின் செல்போன் சிம் கார்டுகளை முடக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. குடிமக்கள் அனைவரையும் விரைவில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஊக்கப்படுத்தும் வகையில் இந்த தடாலடி நடவடிக்கையை பஞ்சாப் மாகாண சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. 
 

click me!