கொரோனா உறுதியாகும் சதவீதமும் 15.7ஆக உயர்ந்துள்ளதால் மூன்றாம் அலை அச்சம் எழுந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா 2வது அலை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல் அலையை ஒப்பிட்டால், இறப்பு விகிதம் அதிகமாக இருந்தது. அதிலும் நடுத்தர வயது நபர்களை கூட மோசமாக தாக்கி உயிர் இழப்புகளை ஏற்படுத்தியது.
அப்போதே சுதாரித்துக்கொண்ட ஒருசில நாடுகள் இரண்டாம் அலையிலிருந்து தங்கள் மக்களைப் பாதுகாத்தனர். ஆனால் பிரிட்டன், பிரேசில், இந்தியா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகள் இரண்டாம் அலையால் பாதிக்கப்பட்டன. குறிப்பாக இந்தியா, தென்னாப்பிரிக்கா, பிரிட்டன் இந்த மூன்று நாடுகளிலும் உருமாறிய கொரோனா பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில்தான் தென்னாப்பிரிக்காவில் மூன்றாவது அலை துவங்கி விட்டதாக அந்த நாட்டு தேசிய தொற்றுநோய் இன்ட்ஸ்டிடியூட் அறிவித்துள்ளது.கடந்த ஏழு நாட்கள் நோய் பாதிப்பு சராசரி சுமார் 6000 கேஸ்கள் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இரண்டாவது அலையில் உச்சகட்ட பாதிப்பின் போது இருந்த எண்ணிக்கையுடன் ஒப்பிட்டால் இது 30% என்று கூறப்படுகிறது. இந்த கணக்கை வைத்து பார்க்கும் போது அங்கு மூன்றாவது அலை துவங்கி விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா உறுதியாகும் சதவீதமும் 15.7ஆக உயர்ந்துள்ளதால் மூன்றாம் அலை அச்சம் எழுந்துள்ளது.