தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களின் மொபைல்போன் எண் முடக்கம்... அதிரடி அறிவிப்பு.. எங்கே தெரியுமா..!

By Thiraviaraj RMFirst Published Jun 12, 2021, 5:22 PM IST
Highlights

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களின் மொபைல்போன் எண்கள் முடக்கப்படும் என பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
 

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களின் மொபைல்போன் எண்கள் முடக்கப்படும் என பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

கொரோனா பரவலை தடுக்கவும் உயிரிழப்புகளை கட்டுப்படுத்தவும் தடுப்பூசி ஒன்றே தீர்வு என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர். ஆனால், தடுப்பூசிகள் குறித்துப் பரவிய வதந்திகளை நம்பிய ஒருசிலர் தடுப்பூசியை போட்டுக்கொள்ள தயங்குகின்றனர். பாகிஸ்தானின் பஞ்சாப்பில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில் முதல் டோஸை போட்டுக்கொண்ட சுமார் 3 லட்சம் பேர் இரண்டாம் டோஸை போட்டுக்கொள்ள முன் வரவில்லை. இதனால் தடுப்பூசியை போட்டுக்கொள்ள முன்வராதவர்களின் மொபைல்போன் எண்கள் முடக்கப்படும் என பஞ்சாப் மாகாண அரசு அறிவித்துள்ளது.

இதேபோல், கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத அரசு ஊழியர்களுக்கு சம்பளத்தை நிறுத்திவைக்கும்படி பாகிஸ்தானின் சிந்து மாகாண முதல்வர் முராத் அலி ஷா கடந்த 3ம் தேதி உத்தரவிட்டது. 

click me!