இந்துக்கள் மாட்டு மூத்திரம் குடிப்பவர்கள்... தரக்குறைவா இழிவா பேசிய பாகிஸ்தான் அமைச்சர்... அங்கேயே வலுக்கும் எதிர்ப்பு !!

By sathish kFirst Published Mar 5, 2019, 1:59 PM IST
Highlights

இந்துக்கள் அனைவரும் மாட்டு மூத்திரத்தை குடித்து வாழ்பவர்கள் என பாகிஸ்தான் அமைச்சர் விமர்சித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

புல்வாமா தாக்குதலை தொடர்ந்து இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் பாகிஸ்தான் மந்திரி ஒருவர் இவ்வாறு கூறி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தானில் உள்ள பல்வேறு கட்சி தலைவர்களும் அமைச்சர் சோகனின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தில் செய்தி மற்றும் கலாச்சார மந்திரியாக இருப்பவர் பையாசூல் ஹசன்சோகன்.
இவர் “சமா” செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில்; இந்தியாவில் உள்ள இந்துக்கள் அனைவரும் பசுவின் மூத்திரத்தை குடித்து வாழ்பவர்கள். அவர்களை போல பாகிஸ்தானியர்கள் இல்லை.

பாகிஸ்தான் நாட்டு மக்களுக்கு தனி கொடி இருக்கிறது. தனி அடையாளம் இருக்கிறது. ஆனால் இந்தியாவில் உள்ள இந்துக்களுக்கு அப்படி எந்த அடையாளமும் இல்லை. இந்தியர்கள் ஒரு மாயை நிலையில் வாழ்கிறார்கள். இஸ்லாமியர்களை விட 7 மடங்கு சிறப்பாக இருப்பதாக தங்களை தாங்களே சொல்லி கொள்கிறார்கள்.

ஆனால் இந்தியாவில் இந்துக்கள் சிலை வழிபாடு செய்பவர்கள். நாங்கள் அப்படி சிலை வழிபாடு செய்வது இல்லை. நாங்கள் செய்யும் வழிபாட்டை இந்தியர்களால் செய்ய இயலாது என இவ்வாறு பாகிஸ்தான் அமைச்சர் சோகன் கூறியிருந்தார்.

பாகிஸ்தான் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் மசாரி கூறுகையில், “எந்த ஒரு மதத்தினரையும் விமர்சிக்கும் உரிமை தனிப்பட்ட யாருக்கும் கிடையாது. பாகிஸ்தான்க்காக இந்துக்களும் தியாகம் செய்துள்ளனர். சகிப்புதன்மையை கையாள வேண்டும்” என்றார்.

மேலும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அமைச்சர் சோகனுக்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். இதைத் தொடர்ந்து அமைச்சர் சோகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தானில் பல்வேறு தரப்பினரும் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர்.

click me!