அபிநந்தன் சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான் விமான பைலட்டுக்கு கொடூரம்... இந்தியராக நினைத்து அடித்துக் கொன்ற பாகிஸ்தானியர்கள்..!

By Thiraviaraj RM  |  First Published Mar 3, 2019, 1:23 PM IST

அபிநந்தனால் சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் விமானியை இந்திய விமானி எனக் கருதி அந்நாட்டு கிராமமக்கள் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 


அபிநந்தனால் சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் விமானியை இந்திய விமானி எனக் கருதி அந்நாட்டு கிராமமக்கள் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

 

Latest Videos

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க மிராஜ் விமானங்கள் மூலம்  பாகிஸ்தான் எல்லையில் உள்ள திவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. இதில் 300க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டன. இதனால் கொதித்துப்போன பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க எல்லைப்பகுதிக்குள் வந்தன. இதனை எதிர்பார்த்துக் காத்திருந்த இந்திய விமானப்படையினர் மிக் -21 ரக விமானத்தில் பாகிஸ்தானில் இருந்து வந்த எப்-16 ரக வினானக்களை துரத்திச் சென்றது. அப்போது இந்திய விங் கமாண்டர் பாகிஸ்தான் எல்லைப்பகுதிக்குள் சென்று எப்-16 ரக அபாகிஸ்தான் விமானத்தை ஏவுகனை மூலம் தாக்கி வெடித்துச் சிதற வைத்தார். 

இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் தரைப்படை ராணுவத்தினர் அபிநந்தன் ஓட்டி வந்த மிக்-21 ரக விமானத்தை சுட்டு வீழ்த்தியது. அந்த விமானத்தை ஓட்டி வந்த அபிநந்தன் பாரசூட் உதவியுடன் தப்பி கீழே விழுந்தார். அவரை பாகிஸ்தான் பொதுமக்கள் தாக்கி பின்னர் ராணுவத்தினரிடம் ஒப்படைத்தனர். அதேநேரம் அபிநந்தனால் சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் எப்-16 ரக விமானத்தை ஓட்டி வந்த விமானியும் பாராசூட் உதவியுடன் கீழே வேறொரு இடத்தில் குதித்து தப்பியுள்ளார். பாகிஸ்தான் விங்  கமாண்டர் விழுந்ததை பார்த்த பாகிஸ்தான் பொதுமக்கள் அவரை இந்திய விமானி என நினைத்து கடுமையாக தாக்கியுள்ளனர். பலத்த காயமடைந்த அவர் சிகிச்சை பலனின்றுஇ உயிரிழந்து விட்டார்.  

28-ந்தேதி தாக்குதல் நடந்தபோது இந்தியாவை சேர்ந்த 2 விமானிகளை நாங்கள் பிடித்துவிட்டதாக பாகிஸ்தான் அறிவித்து இருந்தது. பின்னர் அபிநந்தனை மட்டுமே பிடித்து வைத்திருப்பதாக அறிவித்தது. பாகிஸ்தான் விமானி கொல்லப்பட்ட தகவலை லண்டனில் வசிக்கும் பாகிஸ்தானை சேர்ந்த வழக்கறிஞர் காலித் உமர் என்பவர் உறுதிப்படுத்தி இருக்கிறார்.

 

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘’பாகிஸ்தான் விமானப்படை தரப்பில் இருந்தும் எனக்குள்ள தொடர்பின் மூலம் பல தகவல் கிடைத்துள்ளது. அதில் விமானம் வீழ்த்தப்பட்டது, விமானியை கிராம மக்களே அடித்து கொன்றது உறுதியாகி இருக்கிறது.  விங் கமாண்டர் பெயர் ஷாகஸ் உத் தின்’.  அபிநந்தன் போலவே ஷாகஸ் உத் தினும் விமானப்படை அதிகாரி ஒருவரின் மகன்’’ என அவர் தெரிவித்துள்ளார். 

click me!