Imran khan Pakistan: பரபரப்பு..! பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைப்பு..மீண்டும் தேர்தலை அறிவித்தார் அதிபர்..

By Thanalakshmi V  |  First Published Apr 3, 2022, 2:38 PM IST

பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கான் கோரிக்கை ஏற்று பாகிஸ்தான் அதிபர் ஆரிஃப் ஆல்வி நாடாளுமன்றத்தை கலைத்துள்ளார்.
 


பாகிஸ்தானில் பணவீக்கம், அந்நிய செலவாணி குறைவு, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி உள்ளிட்ட காரணங்களால் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா பெருந்தொற்று காரணமாக பொருளாதாரம் இன்னும் அடி வாங்க துவங்கியது. இதனால் உணவு பொருடகள் உள்ளிட்ட அத்தியாவசியமான பொருட்களின் விலை கடும் உயர்வை சந்தித்தன. இதனால் மக்கள் தங்கள் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் சிரமப்பட்டு வருகின்றனர். 

நம்பிக்கையில்லா தீர்மானம்:

Tap to resize

Latest Videos

இதனால், பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் முடிவு செய்தன. இதனால் கடந்த மாதம் 8 ஆம் தேதி நாடாளுமன்ற செயலரிடம் நம்பிக்கை தீர்மான கொண்டுவருவதற்கான நோட்டீஸை எதிர்க்கட்சிகள் வழங்கின. பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் 179 உறுப்பினர்கள் கொண்டு பெரும்பான்மை பலத்துடன் இருந்த பிரதமர் இம்ரான் கான் அரசை கவிழ்க்க முடியாத நிலைமை இருந்து வந்தது. 

இந்நிலையில் இம்ரான்கான் கட்சியான தெஹ்ரீக் இ இன்சாப் கூட்டணியில் இருந்த அதிருப்தி எம்.பிக்கள்  நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு ஆதரவு தெரிவித்தனர். இதனால் இம்ரான் கான் பலம் 167 ஆக குறைந்தது. இதனால் நம்பிக்கை இல்லா தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேறினால் ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டது.

தீர்மானம் நிராகரிப்பு:

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானு எதிராக எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்தனர். இந்நிலையில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இன்று நாடாளுமன்றத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இம்ரான் கான் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிருப்பாராக அல்லது பதவி விலகுவாராக என்று பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

இந்நிலையில் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை காரணம் காட்டி  பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தை நாடாளுமன்றத்தின் துணை சபாநாயகர் நிராகரித்துள்ளார். இதனை தொடர்ந்து உரையாற்றிய பிரதமர் கான், நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தலை நடத்திட வேண்டும் என்று அதிபரிடம் கோரிக்கை வைத்தார்.

இம்ரான் கான் பேச்சு:

எனது அரசை கவிழ்க்க வெளிநாட்டு சதி நடந்துள்ளது அம்பலமாகியுள்ளது. நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிராகரித்த முடிவு சரியானதே என்று அவர் பேசினார். மேலும் நாடாளுமன்ற தேர்தலுக்கு பாகிஸ்தான் தயாராக வேண்டும். பாகிஸ்தானில் தேர்தல் நடைபெறும் வரை இடைக்கால அரசை அமைக்க வேண்டும் என்று கூறினார்.

நாடாளுமன்றம் கலைப்பு:

இச்சூழலில், நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நிராகரிக்கப்பட்டுள்ளதால் , எதிர்க்கட்சிகள் உச்சநீதிமன்றத்தை நாட திட்டமிட்டுள்ளனர்.இந்நிலையில் பிரதமர் இம்ரான் கான் கோரிக்கயை ஏற்று அதிபர் ஆரிஃப் ஆல்வி நாடாளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டுள்ளார். மேலும் 90 நாட்களுக்குள் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

மேலும் படிக்க: imran khan pakistan: பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்படுகிறது: பிரதமர் இம்ரான் கான் பரிந்துரை

click me!