imran khan pakistan: பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்படுகிறது: பிரதமர் இம்ரான் கான் பரிந்துரை

By Pothy Raj  |  First Published Apr 3, 2022, 1:58 PM IST

imran khan pakistan :பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் காணுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து நாடாளுமன்றத்தில் கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை சபாநாயகர் ரத்து செய்தார்.


பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் காணுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து நாடாளுமன்றத்தில் கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை சபாநாயகர் ரத்து செய்தார். இதையடுத்து, பாகிஸ்தானில் புதிதாக தேர்தல் நடத்தவும், நாடாளுமன்றத்தை கலைக்கவும் பரிந்துரை செய்வதாக பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானை ஆண்ட எந்தப் பிரதமரும் இதுவரை ஆட்சிக்காலத்தை முழுமையாக நிறைவு செய்தது இல்லை. ஆனால் அதை இம்ரான் கான் மாற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தேர்தலுக்கு தயாராக மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

Tap to resize

Latest Videos

நம்பிக்கையில்லாத் தீர்மானம்

பாகிஸ்தானில் கடந்த சில ஆண்டுகளாகவே பொருளாதார வளர்ச்சி அதளபாதாளத்தில் செல்கிறது. கொரோனா பெருந்தொற்றுக்கு பின் பாகிஸ்தானின் பொருளாதார நிலைமை மிகவும் மோசமானது. இதனால், பிரதமர் இம்ரான் காணுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் முடிவு செய்தன.

ஆட்சி கவிழும்

பாகிஸ்தான் நாடாளுமன்றம் 342 உறுப்பினர்களைக் கொண்டது. இதில் பெரும்பான்மை பெறுவதற்கு 172 உறுப்பினர்கள் ஆதரவு தேவை. அந்தவகையில் 179 உறுப்பினர்கள்ஆதரவுடன் பிரதமராக இம்ரான் கான் ஆட்சி நீடித்து வந்தது. ஆனால், இம்ரான்கான் கட்சியான தெஹ்ரீக் இ இன்சாப் கூட்டணியில் இருந்த 10க்கும் மேற்பட்ட எம்.பிக்கள் அதிருப்தியுடன் இருந்தனர். இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆட்சிக்கு எதிராக வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

செல்லாது 

பிரதான எதிர்க்கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் பி.எம்.எல்.-என் கட்சியும், பாகிஸ்தான் மக்கள் கட்சியும் இம்ரான் காணுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை இன்று காலை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தன.

ஆனால், நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் நடக்கும்போது, பிரதமர் இம்ரான் கான் அவையில் இல்லை. நாடாளுமன்றதில் தீர்மானம் முன்மொழியப்பட்டபோது, துணை சபாநாயகர் குவாசிம் கான் சூரி, பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் செல்லாது . சட்டவிரோதமானது. அன்னியநாட்டின் சூழ்ச்சியால் இது நடக்கிறது” எனத் தெரிவித்து தள்ளுபடி செய்தார்.

அந்நிய நாட்டு சதி

இதையடுத்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தொலைக்காட்சியில்மக்களுக்கு உரையாற்றினார் அதில் “ நாடாளுமன்றத்தைக் கலைக்க அதிபருக்கு நான் பரிந்துரைக்கப் போகிறேன். நடக்கின்ற தேர்தல் ஜனநாயக முறைப்படி நடக்க வேண்டும். பாகிஸ்தான் மக்கள் தேர்தலுக்கு தயாராக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். பாகிஸ்தான் சபாநாயகர் முடிவுக்காக ஒவ்வொரு பாகிஸ்தான் மக்களும் அவரைப் பாராட்டுகிறார்கள்.வெளிநாட்டு அரசின் சதியால் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. யார் நம்மை ஆட்சி செய்ய வேண்டும் என்பதை மக்கள் முடிவு செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார்

click me!