பயங்கர அதிர்ச்சி, இந்தியாவுக்கே வரிவிதித்த பாகிஸ்தான்..!! தூதர் மூலம் சொல்லி அனுப்பியது..!!

By Ezhilarasan BabuFirst Published Oct 17, 2019, 3:54 PM IST
Highlights

இந்தியாவிலிருந்து வரும் சீக்கியர்கள் ஒவ்வொருவரிடமுமிருந்து  தலா 20 டாலர்கள் வரை பாகிஸ்தானுக்குள் நுழைவு கட்டணமாக வசூலிக்க பாகிஸ்தான் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியது.  அதற்கான வரைவு அறிக்கையை இந்திய தூதரகத்தின் வாயிலாக இந்தியாவிடம் வாங்கியுள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே  இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில்,  பாகிஸ்தான் அனுப்பிய வரைவு திட்ட அறிக்கையை இதுவரையில் பரிசீலித்து பதிலளிக்காமல் இந்தியா உள்ளது. 

சீக்கிய மதத்தை தோற்றுவித்த குருநானக் தேவ்,  நினைவிடத்தை தரிசிக்க வரும் இந்தியர்களிடம் 20  டாலரை நுழைவு கட்டணமாக வசூலிக்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்கான வரைவு அறிக்கையை இந்திய தூதுரகத்தின் வாயிலாக இந்தியாவிற்கு தகவல் தெரிவித்துள்ளது பாகிஸ்தான்.

சீக்கிய மதத்தை தோற்றுவித்த குருநானக் கடைசி காலத்தில் பாகிஸ்தானிலுள்ள கர்தார்பூர் வாழ்ந்து மறைந்தார். அவர் வாழ்ந்ததற்கு நினைவாக இந்தியா பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ரவி நதிக்கரையில் தர்பார் சாஹிப் குருத்வாரா என்ற பெயரில் அவருக்கு நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் இந்தியாவிலிருந்து அன்றாடம் குறைந்தது 5 ஆயிரம் சீக்கியர்கள்வரை பாகிஸ்தான் கர்தார்பூருக்குச் சென்று குருநானக் நினைவிடத்தை தரிசித்து வருகின்றனர். அத்துடன் ஆண்டுதோறும் அவரது நினைவுதினம் மற்றும் பிறந்த தினங்களில் அவரது நினைவிடத்திற்கு இந்தியாவிலிருந்து லட்சக் கணக்கில் சீக்கியர்கள் புனித பயணம்மேற்கொள்வது வழக்கம்.

அந்த வகையில் வரும்  நவம்பர் 9ஆம் தேதி இந்தியாவிலிருந்து, லட்சக்கணக்கான சீக்கியர்கள் அவரது நினைவிடத்திற்கு புனித பயணம்  மேற்கொள்ள உள்ளனர்.  இந்நிலையில் ஏற்கனவே பாகிஸ்தானும் இந்தியாவும் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி இந்தியாவில் இருந்து  சீக்கியர்கள் எளிதாக புனித பயணம் மேற்கொள்ளும் வகையில் இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டம் தேரா பாபா நகரிலிருந்து, சர்வதேச எல்லை வரை செல்ல சிறப்பு பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து  பாகிஸ்தான் எல்லையில் இருந்து கர்தார்பூர் செல்லும் வரை சிறப்பு பாதையை ஏற்கனவே  பாகிஸ்தான் அமைத்துள்ளது. அந்த பாதையை வரும் நவம்பர் 9 ஆம் தேதி குருநானக்கின் 550-ஆவது பிறந்த  தினத்தன்று பாகிஸ்தான் திறக்க உள்ளது. 

இந்நிலையில் நவம்பர் 9 ஆம் தேதி இந்தியாவிலிருந்து ஏராளமான சீக்கியர்கள் கர்தார்பூர் சென்று குருநாணக் நினைவிடத்தில் வழிபட உள்ளனர். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள திட்டமிட்டுள்ள பாகிஸ்தான்,  இந்தியாவிலிருந்து வரும் சீக்கியர்கள் ஒவ்வொருவரிடமுமிருந்து  தலா 20 டாலர்கள் வரை பாகிஸ்தானுக்குள் நுழைவு கட்டணமாக வசூலிக்க பாகிஸ்தான் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியது.  அதற்கான வரைவு அறிக்கையை இந்திய தூதரகத்தின் வாயிலாக இந்தியாவிடம் வாங்கியுள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே  இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில்,  பாகிஸ்தான் அனுப்பிய வரைவு திட்ட அறிக்கையை இதுவரையில் பரிசீலித்து பதிலளிக்காமல் இந்தியா உள்ளது.  ஏற்கனவே இரு நாடுகளும் செய்து கொண்ட ஒப்பந்தத்தை மீறி இந்தியர்களிடம் பாகிஸ்தான் கட்டணம் வசூலிக்க முடிவு செய்திருப்பது  குறிப்பிடதக்கது.

click me!