நாட்டுக்கு ஆபத்து என பாகிஸ்தான் ராணுவ தளபதி கதறல்..!! பாக் ராணுவத்தினர் மத்தியில் பஜ்வா நடத்திய ட்ராமா..!!

By Ezhilarasan Babu  |  First Published Aug 2, 2020, 4:10 PM IST

காஷ்மீருக்கு எப்போதும் பாகிஸ்தான் ஆதரவு உள்ளது என்றும் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் எந்த சூழ்நிலையையும் சமாளிக்க தயாராக இருக்கவேண்டும் எனவும்,  தங்கள் நாட்டு ராணுவ வீரர்கள் மத்தியில்  பாகிஸ்தான் ராணுவத் தலைவர் பஜ்வா உரையாற்றியுள்ளார்.


காஷ்மீருக்கு எப்போதும் பாகிஸ்தான் ஆதரவு உள்ளது என்றும் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் எந்த சூழ்நிலையையும் சமாளிக்க தயாராக இருக்கவேண்டும் எனவும்,  தங்கள் நாட்டு ராணுவ வீரர்கள் மத்தியில்  பாகிஸ்தான் ராணுவத் தலைவர் பஜ்வா உரையாற்றியுள்ளார். 
இந்தியாவை  மனதில் வைத்தே அவர்  இவ்வாறு பேசியுள்ளார் என செய்திகள் வெளியாகி உள்ளன. 

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பல ஆண்டுகளாக எல்லையில் பதற்றம் நீடித்து வருகிறது, இந்நிலையில் கடந்தாண்டு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை தொடர்ந்து,  எல்லை பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. அதேபோல்  கொரோனா வைரஸ் தொற்றை  தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்  கொண்டு,  இந்திய எல்லைக்குள் தீவிரவாதிகளை ஊடுருவ செய்யும் முயற்சியில் பாகிஸ்தான் ராணுவம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. ஒருபுறம் சீனா இந்தியாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி வரும் நிலையில்  மறுபுறம் பாகிஸ்தான் இந்தியாவிற்கு தொல்லை கொடுக்கும் நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளது. 

Tap to resize

Latest Videos

கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தியா, பாகிஸ்தான் எல்லை கட்டுப்பாட்டு கோட்டு அருகில், பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் துப்பாக்கிச் சூடு நடத்தியது, இதில் ஒரு இந்திய ராணுவ வீரர் கொல்லப்பட்டார், மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். பூஞ்ச் மற்றும் ரஜோரி ஆகிய இடங்களில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியதன் விளைவாக, இந்த மாதத்தில் மட்டும் மூன்று இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர். பாகிஸ்தானின் இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு இந்திய ராணுவமும் பொருத்தமான பதிலடி கொடுத்து வருகிறது.  இதுவரை கடந்த 6 மாதங்களில் பாகிஸ்தான் 2027 முறை போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இருப்பதாகவும், இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. குறிப்பாக இந்தியாவின் கிராமங்களை குறிவைத்து, பாகிஸ்தான் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில் பொதுமக்களும் ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர். எல்லையில் இந்திய ராணுவம் கொடுத்த பதிலடியில் இதுவரை 100 தீவிரவாதிகள் காஷ்மீரில் கொல்லப்பட்டனர்.  எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், பாகிஸ்தான் ராணுவத் தலைவர் கமர் ஜாவேத் பஜ்வா சனிக்கிழமை அன்று கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் உள்ள பாகிஸ்தான் வீரர்களை திடீரென சந்தித்தார். 

அவரின் இந்தப் பயணம் முன் கூட்டியே திட்டமிடபடவில்லை என கூறப்படுகிறது, இந்நிலையில்  எல்லைக்கு வருகை தந்த அவர், முதலில் குரைதா துறையை ஆய்வு செய்தார், அதன்பின்னர் அங்கு தங்கள் நாட்டு ராணுவ வீரர்களை சந்தித்தார், அப்போது அவர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், ஒவ்வொரு நெருக்கடியையும் எதிர்கொள்ள படையினர் தயாராக இருக்க வேண்டும் என்று கோரினார். காஷ்மீருக்கு பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரவளிக்கும் என்ற அவர், இது நாட்டிற்கு கடினமான நேரம், ஏனெனில் பல சவால்கள் ஒன்றாக வந்துள்ளன என்றார். பாகிஸ்தானை பலவீனப்படுத்த சில வெளிசக்திகள் சதி செய்கின்றன என்ற அவர்,  அதனால் தற்போது  ராணுவத்தின் பொறுப்பு இரு மடங்காக அதிகரித்துள்ளது என்றார். தனது எல்லையை பாதுகாக்க வேண்டும் என்பதுடன்,  நாட்டின் நிலைமைகள் மீதும் ஒரு கண் வைத்திருக்க வேண்டும் என்றார்.  எந்த சவால்களையும் எதிர்கொள்ள வகையில், பாகிஸ்தான் ராணுவம் முழு திறமை கொண்டது எனவும் அவர் கூறியுள்ளார்.

 

click me!