“சரியான உள்ளாடைகளை அணியுங்கள்..! பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் விதித்த சர்ச்சை உத்தரவு !”

By Raghupati RFirst Published Sep 30, 2022, 3:58 PM IST
Highlights

சரியான உள்ளாடைகளை அணியுங்கள் என்று கேபின் பணியாளர்களுக்கு பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ், கேபின் குழுவினருக்கு, சரியான உள்ளாடைகளை அணிய வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது என்று பாகிஸ்தான் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன. 

கேபின் குழுவினரின் மோசமான ஆடைகள் ஆனது மோசமான அபிப்பிராயத்தை ஏற்படுத்துகிறது என்றும், விமான நிறுவனங்களைப் பற்றிய எதிர்மறையாக சிந்திக்க தூண்டுகிறது என்றும் கூறியுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாகிஸ்தானில் உள்ள ஜியோ டிவி கூறியிருப்பதாவது, ‘ சில கேபின் பணியாளர்கள் நகரங்களுக்கு இடையே பயணம் செய்யும் போதும், ஹோட்டல்களில் தங்கும் போதும், பல்வேறு இடங்களுக்குச் செல்லும்போதும் சாதாரணமாக உடை அணியாமல் இருக்கிறார்கள்.

இதையும் படிங்க..‘TTFவோட பவர் தெரியாம இருக்கீங்க.. கொஞ்சம் தான் பொறுமை’ - மீடியாக்களுக்கு எச்சரிக்கை விடுத்த டிடிஎஃப் வாசன்!

இத்தகைய ஆடை அணிவது மோசமான அபிப்பிராயத்தை ஏற்படுத்துகிறது. பார்வையாளரின் மீது மற்றும் தனிநபர் மட்டுமல்ல, அது ஒட்டுமொத்த அமைப்பின் எதிர்மறையான படத்தையும் சித்தரிக்கிறது. கேபின் குழுவினர், சரியான உள்ளாடைகளை விட முறையான சாதாரண உடைகளை சரியாக உடுத்த வேண்டும். பாகிஸ்தானின் கலாச்சாரம் மற்றும் தேசிய ஒழுக்கங்களுக்கு ஏற்ப ஆடைகளும் இருக்க வேண்டும் என்று வழிகாட்டுதல் கூறுகிறது’ என்று கூறியுள்ளது.

இதையும் படிங்க..அட ச்சீ.! இப்படியா பண்றது..ஹோட்டலில் ரூம் எடுத்த 2 பெண்கள் - நள்ளிரவில் காத்திருந்த அதிர்ச்சி !

பாகிஸ்தானின் விமானப் போக்குவரத்து மற்றும் ரயில்வே அமைச்சர் கவாஜா சாத் ரபீக், தேசிய கேரியரின் சேவையை மேம்படுத்த PIA அதிகாரிகளுடன் ஒரு சந்திப்பை நடத்தியதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விமானத்தில் உள்ள பொழுதுபோக்கு அமைப்பை பயணிகளுக்கு விரைவில் செயல்படுத்த அமைச்சர் அறிவுறுத்தினார் என்று கூறப்படுகிறது. மறுபுறம், கேபின் குழுவினர் கூடுதல் பணி நேரத்தை எதிர்த்து வருகின்றனர் என்று  சர்வதேச போக்குவரத்து தொழிலாளர்கள் கூட்டமைப்பு சமீபத்தில் PIA CEO அமீர் ஹயாத்துக்கு கடிதம் எழுதியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க..‘கல்லூரிகளுக்கு 5 நாட்கள் விடுமுறை.. அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி அறிவிப்பு !’

click me!