200 ஆண்டுகள் பழமையான கிரிஸ்டல் புல்லாங்குழல்… வாசித்து வரலாறு படைத்தார் லிசோ!!

By Narendran S  |  First Published Sep 29, 2022, 7:56 PM IST

பிரபல புல்லாங்குழல் கலைஞர் லிசோ 200 ஆண்டுகள் பழமையான கிரிஸ்டல் புல்லாங்குழலை வாசித்து வரலாறு படைத்துள்ளார். 


பிரபல புல்லாங்குழல் கலைஞர் லிசோ 200 ஆண்டுகள் பழமையான கிரிஸ்டல் புல்லாங்குழலை வாசித்து வரலாறு படைத்துள்ளார். லிசோ என்றழைக்கப்படும் மெலிசா ஜெபர்சன் என்பவர் பாடகர் மற்றும் திறமையான புல்லாங்குழல் கலைஞர். இவர் வரலாற்று இசைக்கருவிகள் இருக்கும் வாஷிங்டன், டி.சி.யில் இருந்த விலைமதிப்பற்ற கிரிஸ்டல் புல்லாங்குழலை வாசிக்கும் வாய்ப்பைப் பெற்றார். காங்கிரஸின் நூலகம், நாட்டின் மிகப் பழமையான கலாச்சார நிறுவனம் மற்றும் காங்கிரஸின் ஆராய்ச்சிப் பிரிவு, உலகின் மிகப் பழமையான புல்லாங்குழல் சேகரிப்பின் தாயகமாகும். இதனிடையே இந்த நூலகத்தின் நூலகர் கார்லா ஹைடன், லிசோ டி.சி.க்கு நிகழ்ச்சி நடத்த வருவதை அறிந்து புல்லாங்குழல் சேகரிப்பு பற்றி ட்வீட் செய்தார். அதில் உங்கள் பாடலைப் போலவே, அவை குட் அஸ் ஹெல் என்று குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிங்க: இந்தியர்களுக்கான அமெரிக்க விசா; எப்போது கிடைக்கும்? என்ன சிக்கல்? முழு விபரங்கள் இதோ !

NOBODY HAS EVER HEARD THIS FAMOUS CRYSTAL FLUTE BEFORE

NOW YOU HAVE

IM THE FIRST & ONLY PERSON TO EVER PLAY THIS PRESIDENTIAL 200-YEAR-OLD CRYSTAL FLUTE— THANK YOU ❤️ pic.twitter.com/VgXjpC49sO

— FOLLOW @YITTY (@lizzo)

Tap to resize

Latest Videos

நூலகரின் ட்வீட்டுக்கு பதிலளித்த  லிசோ, அந்த புல்லாங்குழலின் தொகுப்பைக் காணும் வாய்ப்பை ஏற்றுக்கொண்டார். இதுக்குறித்த அவரது டிவிட்டர் பதிவில், நான் வருகிறேன் கார்லா! நான் அந்த கிரிஸ்டல் புல்லாங்குழலை வாசிக்கிறேன் என்று தெரிவித்திருந்தார். இதை அடுத்து கடந்த திங்களன்று, லிசோ காங்கிரஸின் நூலகத்திற்கு சென்று அங்குள்ள புல்லாங்குழல் சேகரிப்பை சுற்றிப் பார்த்தார். காங்கிரஸின் நூலகத்தின்படி, கடிகார தயாரிப்பாளராக இருந்த கிளாட் லாரன்ட் என்பவரால் மேடிசனுக்காக கிரிஸ்டல் புல்லாங்குழல் செய்யப்பட்டது. லிசோ புல்லாங்குழல் சேகரிப்பை சுற்றிப்பார்த்தது மட்டுமல்லாமல், நூலகத்தின் கிரேட் ஹாலில் சின்னமான புல்லாங்குழல் வாசிப்பதையும் பயிற்சி செய்தார். பின்னர் செவ்வாயன்று, புல்லாங்குழல் கவனமாகவும் பாதுகாப்பாகவும் அரங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது.

இதையும் படிங்க: அரசு ஊழியர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை... எந்த நாட்டில் தெரியுமா?

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Lizzo (@lizzobeeating)

அதனை லிசோ வாசித்தார். பின்னர் பேசிய அவர், நாங்கள் இன்று இரவு வரலாற்றை உருவாக்கினோம் என்று தெரிவித்தார். பெரும்பாலான புல்லாங்குழல்கள் மரம் அல்லது தந்தத்தால் செய்யப்பட்டிருந்தாலும், லாரன்ட் கண்ணாடி புல்லாங்குழலைக் கண்டுபிடித்தார், மேலும் அது அதன் சுருதியையும் தொனியையும் சிறப்பாக வைத்திருந்ததால், அது பிரபலமடைந்தது. ஆனால் லாரன்ட் மட்டுமே கண்ணாடி புல்லாங்குழல் தயாரிப்பதால், இறுதியில் அவை பிரபலமடைந்து, இன்று 185 மட்டுமே இருப்பதாக அறியப்படுகிறது. 1812 ஆம் ஆண்டு போரின் போது ஆங்கிலேயர்கள் வாஷிங்டன், டி.சி.க்குள் நுழைந்தபோது, ஏப்ரல் 1814 இல் காங்கிரஸின் லைப்ரரி சேகரிப்பில் இருந்த கண்ணாடி புல்லாங்குழல் கிட்டத்தட்ட அழிக்கப்பட்டது. இருப்பினும், அதனை டோலி மேடிசன் அதை வெள்ளை மாளிகையில் இருந்து மீட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!