அரசு ஊழியர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை... எந்த நாட்டில் தெரியுமா?

By Narendran SFirst Published Sep 29, 2022, 5:43 PM IST
Highlights

அரசு ஊழியர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதித்து உத்தவிடப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அரசு ஊழியர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதித்து உத்தவிடப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும் அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

இதையும் படிங்க: இந்தியர்களுக்கான அமெரிக்க விசா; எப்போது கிடைக்கும்? என்ன சிக்கல்? முழு விபரங்கள் இதோ !

இதை அடுத்து பிரதமர் மகிந்த ராஜபக்சே, பின்னர் அமைச்சர்கள், அடுத்து அதிபர் கோத்தபய ராஜபக்சே என அனைவரும் பதவி விலகினர். பின்னர் போராட்டங்கள் சற்று குறைந்த நிலையில் தற்போது மக்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இலங்கையில் பொருளாதார நெருக்கடி, உணவு பற்றாக்குறை, விலை உயர்வு என்று எதுவும் மாறாமல் இருக்கும் நிலையில் உணவில்லாததால் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மயக்கம் போட்டு விழுவதாக அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: விண்கல்லில் மீது செயற்கைக்கோளை மோதச் செய்த அமெரிக்கா! காரணம் என்ன?

இதையடுத்து அரசு ஊழியர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதுக்குறித்து இலங்கை அரசு வெளியிட்ட உத்தரவில், ஒரு பொது அதிகாரி சமூக ஊடகங்களில் கருத்துக்களை வெளிப்படுத்துவது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வழிவகுக்கும் குற்றமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருப்பதாக கூறப்படுவது உண்மையில்லை என்றும் அரசு மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

click me!