கொரோனாவுக்கு அடுத்து புதுசா ஒரு வைரஸை பரப்பும் சீனா.. ஹண்டா வைரஸுக்கு சீனாவில் ஒருவர் பலி

By karthikeyan V  |  First Published Mar 24, 2020, 3:06 PM IST

கொரோனாவையே சமாளிக்க முடியாமல், உலகமே மிகப்பெரிய விலை கொடுத்துவரும் நிலையில், சீனாவில் ஹண்டா வைரஸுக்கு ஒருவர் பலியாகியுள்ளார்.
 


சீனாவின் வுஹான் மாகாணத்தில் உருவானா கொரோனா வைரஸ், இத்தாலி, ஸ்பெய்ன், அமெரிக்கா ஆகிய நாடுகளில் தீவிரமாக பரவி, பேரிழப்பை ஏற்படுத்திவருகிறது. இத்தாலியில் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோரும், சீனாவில் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோரும் என மொத்தமாக உலகம் முழுவதும் 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர்.

கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ள, ஒவ்வொருவரும் தங்களை தனிமைப்படுத்திக்கொள்வதே ஒரே வழி என்பதால், உலகமே முடங்கியுள்ளது. 

Latest Videos

கொரோனாவால் உலகம் முழுதும் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு, 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ள நிலையில், இந்த பீதியிலிருந்தே உலகம் இன்னும் மீளாத நிலையில், அதற்குள்ளாக சீனாவில் ஹண்டா வைரஸுக்கு ஒருவர் பலியாகியிருப்பது பதற்றத்தை இன்னும் அதிகரித்துள்ளது. 

சீனாவின் யுனான் மாகாணத்திலிருந்து ஷடாங் மாகாணத்திற்கு பேருந்தில் சென்ற ஒருவர் திடீரென உயிரிழந்தார். இதையடுத்து அவரை பரிசோதித்து பார்த்ததில் அவர் ஹண்டா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து அவருடன் அந்த பேருந்தில் பயணித்த 32 பேரும் பரிசோதிக்கப்பட்டனர். 

இதே வைரஸ் பிரான்ஸின் நியூ ஒர்லியன்ஸ் பகுதியிலும் இந்த ஹண்டா வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்ததை அடுத்து, அங்கு ஹோட்டல்கள், பார்கள், கிளப்புகள் மூடப்பட்டன. காய்ச்சல், தலைவலி, உடல்வலி, வயிற்றுவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகியவைதான் இந்த வைரஸின் அறிகுறிகள். கொரோனாவையே தாக்குப்பிடிக்க முடியாமல் உலக நாடுகள் திணறிவரும் நிலையில், சீனாவில் ஹண்டா வைரஸுக்கு ஒருவர் பலியான சம்பவம் மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது. 
 

A person from Yunnan Province died while on his way back to Shandong Province for work on a chartered bus on Monday. He was tested positive for . Other 32 people on bus were tested. pic.twitter.com/SXzBpWmHvW

— Global Times (@globaltimesnews)
click me!