சிங்கப்பூரில் ஶ்ரீ நாராயண மிஷன் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட ஓணம் பண்டிகை விருந்தில் அந்நாட்டு அமைச்சர் ஓங் யீ காங் கலந்துகொண்டார்.
மலையாள மக்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஓணம் பண்டிகளை இந்தியாவில் கடந்த ஆகஸ்ட் 20் தேதி கொண்டாடப்பட்டது. அதே நாளில் உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் ஒணம் பண்டிகையை விமர்சையாக கொண்டாடினர்.
இந்நிலையில், சிங்கப்பூரில் ஸ்ரீ நாராயண மிஷன் சார்பில் ஓணம் பண்டிகை விருந்து மற்றும் ஶ்ரீ நாராயண குருவின் 169வது பிறந்தநாள் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், சிங்கப்பூரின் சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் (Ong Ye Kung) சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்.
இந்த விழா, நேற்று காத்திபில் (Khatib) உள்ள பல்நோக்கு அரங்கில் காலை முதல் மாலை வரை பல்வேறு நிகழ்ச்சிகளுடன் விமர்சையாக நடைபெற்றது. விழாவில் அமைச்சருக்காக சிறப்பு ஓணம் சத்யா விருந்தும் பரிமாறப்பட்டது.
அது குறித்து அமைச்சர் ஓங் யீ காங் தனது Instagram பக்கத்தில் ஒரு சிறப்பு பதிவிட்டுள்ளார். அதில், ஓணம் சத்யா (Sadhya) என்பது 20க்கும் மேற்பட்ட உணவுவகைகள் கொண்ட பாரம்பரிய சைவ உணவு என குறிப்பிட்டுள்ளார்.
பல வண்ணங்களிலும், சுவைகளிலும் கொண்ட அந்த உணவுவகைகளை வாழை இலையில் ருசித்து மகிழ்ந்தேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அருஞ்சுவை உணவுடன், ஆடல் பாடல் நிகழ்ச்சியும் மக்களை மகிழ்வித்தது என அமைச்சர் ஓங் யீ காங் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
இந்திய சிங்கப்பூர் இடையேயான உறவு போற்றத்தக்கது! - அரிசி ஏற்றுமதிக்கு சிறப்பு அனுமதி அளித்த இந்தியா!