காங்கோ நாட்டில் வாகனம் ஒன்றின் மீது எண்ணெய் லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 60 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 100 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காங்கோ நாட்டில் வாகனம் ஒன்றின் மீது எண்ணெய் லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 60 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 100 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காங்கோ நாட்டில் கின்சாசா நகரின் மேற்கே 120 கி.மீ. தொலைவில் கிசான்டு நகர் அருகே நெடுஞ்சாலையில் எண்ணெய் லாரி ஒன்று இன்று சென்று கொண்டு இருந்துள்ளது. அதிகளவில் சரக்குகளை ஏற்றி கொண்டு செல்லும் லாரிகள் மற்றும் எண்ணெய் லாரிகள் இந்த நெடுஞ்சாலை வழியே சென்றுக்கொண்டிருந்தது.
அப்போது எதிர்பாராத விதமாக வாகனம் ஒன்றின் மீது எண்ணெய் லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதனை அடுத்து எழும்பிய நெருப்பு பிழம்புகள் அருகில் இருந்த வீடுகளுக்கும் பரவின. இந்த சம்பவத்தில் 60 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் தீக்காயங்களுடன் உயிருக்கு போராடி வருகின்றனர். பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.