2018 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் கடந்த சில நாட்களாக அறிவிக்கப்பட்டு வருகிறது. ஸ்டாக் ஹோமில் நடந்த விழாவில் அறிவிப்பு வெளியாகி வருகிறது.
2018 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் கடந்த சில நாட்களாக அறிவிக்கப்பட்டு வருகிறது. ஸ்டாக் ஹோமில் நடந்த விழாவில் அறிவிப்பு வெளியாகி வருகிறது. இயற்பியலுக்கான நோபல் பரிசும், வேதியியலுக்கான நோபல் பரிசும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், 2018 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு காங்கோ நாட்டை சேர்ந்த டென்னிஸ் முக்வேஜாவுக்கும், ஈராக்கின் குர்தீஷ் இனத்தை சேர்ந்த நாடியா முராத் ஆகியோருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. போர் மற்றும் உள்நாட்டு போரின் போது நடத்தப்படும் பாலியல் வன்முறைகளுக்கு எதிராக போராடியதற்காக அவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
ஈராக்கைச் சேர்ந்த குர்து மனித உரிமை அமைப்பின் மூலம் சிறுபான்மையினரான யாசிதி பெண்களுக்காக உலகம் முழுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருபவர் நாடியா முராத். காங்கோ நாட்டைச் சேர்ந்த டென்னிஸ் முக்வேஜா, ஒரு டாக்டராவார். போரின்போது பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளான பெண்களுக்கு இவர் சிகிச்சை அளித்து வருகிறார். நாடியாவும், முக்வேஜாவும் 2018 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை பகிர்ந்து கொள்கின்றனர்.