ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி..! ஒரு மணி நேரம் வேலை செய்தால் 1000 ரூபாய்..!

Published : Oct 03, 2018, 06:50 PM IST
ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி..! ஒரு மணி நேரம் வேலை செய்தால் 1000 ரூபாய்..!

சுருக்கம்

அமேசன் நிறுவன ஊழியர்களுக்கு சம்பளத்தை அதிகரித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. ஆன்லைன் வர்த்தகத்தில் அமேசான் நிறுவனம் உலக அளவில் இரண்டாவது இடத்தை பிடித்து உள்ளது.

அமேசன் நிறுவன ஊழியர்களுக்கு சம்பளத்தை அதிகரித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. ஆன்லைன் வர்த்தகத்தில் அமேசான் நிறுவனம் உலக அளவில் இரண்டாவது இடத்தை பிடித்து உள்ளது. இந்த நிறுவனம், அமெரிக்காவின் சியாட்டல் பகுதியில் செயல்பட்டு வருகிறது. 

ஆன்லைன் வர்த்தகத்தில் பெரிய அளவில் சாதனை செய்து வந்தாலும், ஊழியர்களுக்கு  போதுமான சம்பளம் இல்லை என ஊழியர்கள் சில மாதங்களாக போர்க்கொடி தூக்கினர். கூடுதல் வேலைப்பளு, கூடுதலாக பணியாற்ற வலியுறுத்தல், விடுமுறை மறுப்பு போன்ற பல காரணத்தினால்,கூடுதல் சம்பளம் வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர் ஊழியர்கள்

இதனை அடுத்து, இதற்கு முன்னதாக ஒரு மணி நேரத்திற்கு, 450 ரூபாயாக இருந்த சம்பளத்தை 1000 ரூபாயாக உயர்த்தி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது அமேசான். இந்த ஊதிய உயர்வு ஒப்பந்தம் மற்றும் தற்காலிக ஊழியர்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ஊதிய உயர்வு நவம்பர் மாதம் 1 ஆம் தேதி அமலுக்கு வரும் என கூறப்பட்டு உள்ளது 
 

PREV
click me!

Recommended Stories

நண்பேண் டா..! இந்தியாவுக்காக உதவ மீண்டும் முன்வந்த புடின்..! ரஷ்யாயாவுடன் பிளாக்பஸ்டர் ஒப்பந்தம்..!
இந்திய எல்லைக்குள் ஊடுருவிய ஜெய்ஷ்-இ-முகமது பெண்..! பாகிஸ்தானை அம்பலப்படுத்தப்போகும் ஷாஹ்னாஸ் அக்தர்..!