இந்தோனேசியாவில் ஏற்பட்ட அதிசய சுனாமி...! குழம்பி போன விஞ்ஞானிகள் கூறிய 2 காரணங்கள்..!

By thenmozhi gFirst Published Oct 2, 2018, 6:06 PM IST
Highlights

இந்தோனேசியாவில் சமீபத்தில் எற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து பின்னர் சுனாமி ஏற்பட்டது.  கடந்த 28 ஆம் தேதி ஏற்பட்ட சுனாமியால் இதுவரை பலி எண்ணிக்கை மட்டுமே 1300 ஐ தாண்டியது.
 

இந்தோனேசியாவில் சமீபத்தில் எற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து பின்னர் சுனாமி ஏற்பட்டது.  கடந்த 28 ஆம் தேதி ஏற்பட்ட சுனாமியால் இதுவரை பலி எண்ணிக்கை மட்டுமே 1300 ஐ தாண்டியது.இந்தோனேசியாவில் நிலநடுக்கம் ஏற்பட்ட உடன் தொடர்ந்து மூன்று மணி நேரம் சுனாமி வருவதற்கான  அறிகுறி உள்ளதா என்று கண்காணிக்கப்பட்டு வந்தது.

பின்னர் சுனாமி திடீரென வந்துள்ளது. இருந்த போதிலும் சுனாமி வருவதற்கான எந்த அறிகுறியும் இல்லை. பொருத்தபபட்ட எந்த கருவியிலும் சுனாமி ஏற்படுவதற்கான எந்த அறிகுறியும் பதிவாக வில்லை என   விஞ்ஞானிகள் கூறி உள்ளனர்

சுனாமி ஏற்படுவதை முன் கூட்டியே கண்டுப்பிடிக்க இந்தியாவும் கருவிகளை பொருத்தி உள்ளது. ஐதராபாத்தில் உள்ள கடல் தகவல் தேசிய மையம் இதை கண்காணித்து வருகிறது. அவர்களுக்கும் சுனாமி வருவது பற்றி கருவிகள் எதுவும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது வேறு எப்படி தான் சுனாமி ஏற்பட்டு இருக்கும் என்று 2 காரணங்களை கூறி உள்ளார் கடல் ஆய்வியல்   மையத்தின் தலைவர் பட்டாபி ராமராவ்.

அதில், "நிலநடுக்கத்தால், கடலுக்கு அடியில் நிலசரிவு ஏற்பட்டு சுனாமி கடலுக்கு அடியில் இருந்து தோன்றி  இருக்கலாம்...அல்லது சிறிய அளவில் தோன்றிய அலை அப்படியே பெரிய அலையாக மாறி சுனாமியாக வந்திருக்கலாம். என கூறி உள்ளார்.
 

click me!