அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளி இந்தியா - ஒபாமா ஒப்புதல்

First Published Dec 27, 2016, 12:45 PM IST
Highlights


அமெரிக்க பாதுகாப்புத் துறையின் 2017-ம் ஆண்டுக்கான வரைவு பட்ஜெட்டுக்கு, அந்நாட்டு அதிபர் பராக் ஒபாமா ஒப்புதல் அளித்துள்ளார். இந்த பட்ஜெட்டில், அமெரிக்காவின் நெருங்கிய பாதுகாப்பு கூட்டாளியாக இந்தியாவை அங்கீகரிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. 

அமெரிக்காவில், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம், அடுத்த ஆண்டுக்கான பாதுகாப்புத் துறை வரைவு பட்ஜெட் தயாரிக்கப்பட்டு, அந்நாட்டு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறப்படும்.

தேசிய பாதுகாப்பு அங்கீகார சட்டம் என்ற பெயரில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வரைவு பட்ஜெட், கடந்த 9-ம் தேதி அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இதற்கு அதிபர் பராக் ஒபாமா ஒப்புதல் அளித்தார். இதில், பாதுகாப்புத் துறைக்கு 41 லட்சத்து 92 ஆயிரத்து 256 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

இந்த பட்ஜெட்டில், அமெரிக்காவின் நெருங்கிய பாதுகாப்பு கூட்டாளியாக இந்தியாவை அங்கீகரிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம், அமெரிக்க ராணுவத்தின் உயர் தொழில்நுட்பங்கள் இந்தியாவுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்காக, பாகிஸ்தானுக்கு 8 ஆயிரத்து 140 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்க பட்ஜெட்டில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

ஆனால், அமெரிக்காவின் நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டால் மட்டுமே இந்த நிதியுதவி அளிக்கப்படும் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

click me!