சிலியில் பயங்கர நிலநடுக்கம்- சுனாமி எச்சரிக்கை

 
Published : Dec 26, 2016, 12:24 PM ISTUpdated : Sep 19, 2018, 02:54 AM IST
சிலியில் பயங்கர நிலநடுக்கம்- சுனாமி எச்சரிக்கை

சுருக்கம்

தென்கிழக்கு சிலி பகுதியில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டு பிறகு வாபஸ் பெறப்பட்டது.

அந்நாட்டு நேரப்படி நேற்று காலை 11.22 மணியளவில் நேரிட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 7.6 ஆகப் பதிவாகியிருந்தது.

இதையடுத்து உடனடியாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. சிலியின் தேசிய அவசரகால அலுவலகம், கடற்கரையோர மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயருமாறு அறிவுறுத்தியது. ஆனால் சிறிது நேரத்தில் சுனாமி எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது.

பயங்கர நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 5 மாகாணங்களுக்கு விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

PREV
click me!

Recommended Stories

வங்கதேசத்தில் தவிக்கும் 4,000 காஷ்மீர் மாணவர்கள்.. உதவி கேட்டு பிரதமர் மோடிக்கு கடிதம்!
விளையாட வரமாட்டியா? நண்பன் மறைந்தது தெரியாமல் குழந்தைகள் எழுதிய கடிதம்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்!