வெள்ளை மாளிகையில் கடைசி கிறிஸ்துமஸ் பண்டிகையைக் காெண்டாடினார் ஒபாமா!

First Published Dec 25, 2016, 12:34 PM IST
Highlights


அமெரிக்க அதிபர் ஒபாமா, அமெரிக்கா மற்றும் உலக மக்கள் அனைவருக்கும் தனது கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் தனது மனைவி மிச்செலுடன் வெள்ளை மாளிகையில் முதன் முதலாக கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடினார். 

அமொிக்க அதிபா் பாரக் ஒபாமா, வெள்ளை மாளிகையில் தனது மனைவி மிச்செல் ஒபாமா மற்றும் ராணுவ அதிகாரிகளுடன் கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடினார். அதிபராக தனது கடைசி கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடிய அவர், நாட்டு மக்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார். அப்போது, கிறிஸ்தவ மக்களுக்கு மட்டுமின்றி, அமெரிக்காவில் வாழும் அனைத்து மதத்தினருக்கும், உலக நாடுகளில் வாழும் மக்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக ஒபாமா குறிப்பிட்டார். ஒபாமாவின் மனைவி மிச்சேல் தெரிவித்த வாழ்த்தில், அனைவரையும், சகோதர சகோதரிகளாக எண்ணி அவர்களுக்கான மரியாதையை வெளிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதனையடுத்து ஒபாமா, அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசு அளிக்க உள்ளதாக தெரிவித்தார்.

click me!