இன்று கிறிஸ்துமஸ் விழா..!! - உலகமெங்கும் கோலாகல கொண்டாட்டம்

First Published Dec 25, 2016, 11:17 AM IST
Highlights


இயேசு கிறித்துவின் பிறப்பைக் குறிக்க  ஆண்டு தோறும் கிறிஸ்துமஸ்  விழாவாக கொண்டாடப்படுகிறது. இவ்விழாவானது கிறித்தவத் திருவழிபாட்டு ஆண்டில் திருவருகைக் காலத்தினை முடிவு பெறச்செய்து, பன்னிரண்டு நாட்கள் கொண்டாடப்படும் கிறித்து பிறப்புக் காலத்தின் தொடக்க நாளாகும்.

திருப்பலி, குடில்கள், கிறிஸ்துமஸ் தாத்தா, வாழ்த்து அட்டைகளையும் பரிசுகளையும் பரிமாறல், கிறிஸ்துமஸ் மரத்தை அழகூட்டல், கிறிஸ்துமஸ் மகிழ்ச்சிப் பாடல், சிறப்பு விருந்து என்பன கிறிஸ்துமஸ் தினத்தில் பொதுவாக அடங்கும். 

கிறிஸ்து பிறப்பு விழா கிறிஸ்தவர்களின் ஒரு முக்கியமான திருநாளாகும். இது பெரும்பாலான கிறிஸ்தவர்களால் டிசம்பர் 25ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. எனினும் கிழக்கு மரபுவழி திருச்சபைகள் இதனை யூலியின் நாட்காட்டியில் டிசம்பர் 25ஐக் குறிக்கும் நாளான ஜனவரி 7ஆம் நாள் கொண்டாடுகின்றன. 

ஒவ்வொரு வருடமும் நாம் ஆவலுடன் எதிர்பார்க்கும் பண்டிகைகளில் கண்டிப்பாக கிறிஸ்துமஸ் பண்டிகையும் முக்கியமான இடத்தை பெற்றிருக்கும். கிறிஸ்துமஸ் என்பது இனிப்புகள், விருந்துகள் போன்றவற்றுடன் மட்டுமே முடிந்து விடக்கூடியது கிடையாது. இக்கொண்டாட்டத்தின் மதம் சாராப் பகுதிகளாக குடும்ப உறுப்பினர்கள் ஒன்று கூடல், நல்லெண்ணங்களை வளர்த்தல் உள்ளிட்டவை  பின்பற்றப்படுகின்றன.

கிறிஸ்துமஸ் ஏன் காெண்டாடப்படுகிறது?

 

இயேசு கிறிஸ்து, கிறிஸ்துமஸ் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய அரிய தகவல்களை கீழே விரிவாக பார்க்கலாம்.

 

 

* இயேசு கிறிஸ்து கி.மு.5ஆம் ஆண்டு, பாலஸ்தீன் நாட்டின் பெத்லகேம் நகரில் பிறந்தார். பெத்லகேம் என்றால் ‘அப்பத்தின் வீடு’ என்பது பொருள்.

 

* இயேசு என்ற பெயரின் எபிரேய மூலச்சொல்லான ‘யெஷ¨வா’ என்பதற்கு ‘கடவுள் விடுவிக்கிறார்’ என்றும், கிறிஸ்து என்ற கிரேக்க வார்த்தைக்கு ‘அருட்பொழிவு பெற்றவர்’ எனவும் பொருள்.

* கி.பி.240களில் மார்ச் 28ந்தேதி கிறிஸ்து பிறப்பு விழா கொண்டாட்டம் நிகழ்ந்ததாக, அக்கால கிறிஸ்தவ நாள்காட்டி குறிப்பிடுகிறது.

 

* டிசம்பர் 25ந்தேதி கிறிஸ்துமஸ் கொண்டாடும் வழக்கம் கி.பி.336ஆம் ஆண்டு ரோம் நகரில் தோன்றியது. இந்த தேதிக்கு, போப் முதலாம் ஜூலியஸ் அங்கீகாரம் வழங்கினார்.

 

* கிறிஸ்துமஸ் கேரல் கீதங்கள் 4ஆம் நூற்றாண்டு முதல் ஆலயங்களிலும், 13ஆம் நூற்றாண்டு முதல் தெருக்களிலும் பாடப்படுகின்றன.

 

* கிறிஸ்துமஸ் விழாவின்போது, இயேசு பிறந்த காட்சியை குடிலாக அமைக்கும் வழக்கத்தை, அசிசி புனித பிரான்சிஸ் 1223ஆம் ஆண்டு தொடங்கி வைத்தார். 

 

* கிறிஸ்துமஸ் தாத்தா பரிசு கொடுக்கும் வழக்கம் 10ஆம் நூற்றாண்டில் தோன்றினாலும், தொப்பையும், குல்லாவும் கொண்ட சான்டாகிளாஸ் 19ஆம் நூற்றாண்டில்தான் வடிவம் பெற்றார்.

* 16ஆம் நூற்றாண்டு முதலே கிறிஸ்துமஸ் விழாக்களை நட்சத்திரங்கள் அலங்கரித்து வருகின்றன.

 

* 15ஆம் நூற்றாண்டு முதல் வழக்கத்தில் உள்ள கிறிஸ்துமஸ் மரம், 1882ஆம் ஆண்டு முதன்முதலாக மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது.

click me!