
கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு வாடிகன் நகரில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் உரை நிகழ்த்திய போப் ஆண்டவர் பிரான்சிஸ், கத்தோலிக்க மக்களுக்கு தமது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.
கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று உலகம் முழுவதும் கிறிஸ்தவ மக்களால் காெண்டாடப்பட்டு வருகிறது. தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டு வருகிறது.
இதனிடையே வாடிகனில் சிறப்பு பிரார்த்தனையில் பேசிய போப் பிரான்சிஸ், உலகம் முழுவதும் பல லட்சம் பேர் பட்டினி கிடப்பதாகவும், பலர் அகதிகளாக புலம் பெயர்வதாகவும் குறிப்பிட்டார்.
பல்வேறு நாடுகளில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளதாகவும் அவர் வேதனை தெரிவித்தார். உலகம் முழுவதும் அனாதைகளாக கைவிடப்பட்டுள்ள குழந்தைகளின் நலன்களுக்காக சிந்திக்க வேண்டும் என்று போப் பிரான்சிஸ் கேட்டுக் கொண்டார். கிறிஸ்துமஸ் தின நள்ளிரவு பிரார்த்தனைக்காக பல்லாயிரக்கணக்கான மக்கள் உற்சாகத்துடன் ஜெருசலேம் ஆலயங்களில் திரண்டிருந்தனர். மேற்கு கரையில் உள்ள பெத்லஹம் தேவாலயத்தில், பேண்டு வாத்திய இசையுடன் கிறிஸ்துமஸ் கீதங்கள் இசைக்கப்பட்டன.