பாப் பாடகர் ஜார்ஜ் மைக்கேல் மரணம்…

 
Published : Dec 26, 2016, 02:56 PM ISTUpdated : Sep 19, 2018, 02:54 AM IST
பாப் பாடகர் ஜார்ஜ் மைக்கேல் மரணம்…

சுருக்கம்

ஜார்ஜ் மைக்கேல்…பாப் இசை உலகின் முடிசூடா மன்னனாக திகழ்ந்தவர்..லண்டனைச் சேர்ந்த ஜார்ஜ் மைக்கேல் தனது இசைக் குழு மூலமாக உலகம் முழுவதும் பாடி மிகவும் பிரபலமானார். ஜார்ஜ்மைக்கேலின் ஆல்பம் கோடிக்கணக்கில் விற்பனை ஆகி சாதனை படைத்துள்ளது.

53 வயதான  மைக்கேல் உடல்நலக் குறைவுக் காரணமான நீண்ட காலமாக மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று  மைக்கேல் உயிரிழந்தார் கிருஸ்துமஸ் நாளான நேற்று அவர் உயிரிழந்தது அனைவரையும் சோகக் கடலில் ஆழ்த்தியது..

முன்பு ஒருமுறை  போதைப்பொருள் தொடர்பான பிரச்சனையால் பாதிக்கப்பட்ட ஜார்ஜ் மைக்கேலின் வாகனம் ஒரு விபத்துக்குள்ளான போது, சிறிது காலம் அவர் சிறையில் இருக்க நேர்ந்தது. ஜார்ஜ் மைக்கேலின் கார் விபத்துக்குள்ளான போது, அவர் போதைப்பொருள் உட்கொண்டிருந்ததாக கூறப்பட்டது.

ஜார்ஜ் மைக்கேலுக்கு உலகம் முழுவதிலும் இருந்து புகழஞ்சலி செலுத்ப்பட்டு வருகிறது. மிகவும் வெற்றிகரமான இசைப்பயணத்தில், ஜார்ஜ் மைக்கேலின் இசைத்தட்டுகள் உலகெங்கும் பல மில்லியன் அளவில் விற்பனையாகி சாதனை படைத்துள்ளன.

PREV
click me!

Recommended Stories

வங்கதேசத்தில் தவிக்கும் 4,000 காஷ்மீர் மாணவர்கள்.. உதவி கேட்டு பிரதமர் மோடிக்கு கடிதம்!
விளையாட வரமாட்டியா? நண்பன் மறைந்தது தெரியாமல் குழந்தைகள் எழுதிய கடிதம்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்!