அமெரிக்காவில் இருந்து ரஷ்ய அதிகாரிகள் வெளியேற்றம்…ஒபாமா அதிரடி உத்தரவு…

Asianet News Tamil  
Published : Dec 30, 2016, 06:17 AM ISTUpdated : Sep 19, 2018, 02:54 AM IST
அமெரிக்காவில் இருந்து ரஷ்ய அதிகாரிகள் வெளியேற்றம்…ஒபாமா அதிரடி உத்தரவு…

சுருக்கம்

அமெரிக்காவில் இருந்து ரஷ்ய அதிகாரிகள் வெளியேற்றம்…ஒபாமா அதிரடி உத்தரவு…

அமெரிக்காவில் கடந்த நவம்பர் மாதம் 8–ந் தேதி நடைபெற்ற அதிபர்  தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் ‘பாப்புலர் ஓட்டு’ என்று அழைக்கப்படும் மக்கள் ஓட்டுகளை அதிக அளவில் பெற்றாலும், குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் ‘எலெக்டோரல் ஓட்டு’ என்னும் தேர்தல் சபை வாக்குகளை அதிகம் பெற்றதால், வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

ஆனால் டொனால்டு டிரம்ப் வெற்றி பெறுவதற்கு ஆதரவாக ரஷ்யா செயல்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்ததுள்ளன.

இந்த தேர்தல் முறையில் ரஷியாவை சேர்ந்த ஹேக்கர்கள் நுழைந்து மோசடி செய்துவிட்டதாக கிரீன் கட்சி வேட்பாளர் ஜில் ஸ்டீன் என்பவர் குற்றம் சாட்டி இருந்தார்.

தற்போது அமெரிக்காவின் உளவு ரகசியங்களை வெளியிட்ட எட்வர்டு ஸ்னோடன், இதே குற்றச்சாட்டை கூறி இருந்தார். டொனால்டு டிரம்ப் வெற்றி பெறும் வகையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடுகள் நடைபெற்றதற்கான ஆதாரம் உள்ளதாகவும் ஸ்னோடன் தெரிவித்தார். 

இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் முறைகேடு செய்ததாக எழுந்த குற்றச்சாட்டில் வாஷிங்டனில் உள்ள ரஷ்ய தூதரகத்தில் இருந்து .அந்நாட்டு அதிகாரிகள் 35 பேரை அதிரடியாக நீக்கம் செய்து ஒபாமா உத்தரவிட்டுள்ளார்.

நீக்கம் செய்யப்பட்ட ரஷ்ய தூதரக அதிகாரிகள் 35 பேரை அவர்கள் குடும்பத்தினருடன் அமெரிக்காவை விட்டு வெளியேற 72 மணி நேரம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

 

PREV
click me!

Recommended Stories

எரியும் வளைகுடா... ஸ்தம்பிக்கும் எரிசக்தி..! நடுவில் சிக்கித் தவிக்கும் இந்தியா
5,000 அடி ஆழத்தில் அணுசக்தி எரிமலை..! டிரம்பின் தூக்கத்தைக் கெடுக்கும் ஈரானின் ரகசியக் கோட்டை..!