சீனாவில் பெருகும் பாலியல் குற்றங்கள்...!! தண்டணையை மாற்றி அதிரடி காட்டிய ஜிஜின் பிங்...!!

By Ezhilarasan BabuFirst Published Dec 30, 2019, 12:01 PM IST
Highlights

சீனாவில் பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு காவல்மையங்களில்  அடைத்து வைக்கப்பட்டு வந்தநிலையில் இனி தண்டனைக்கு அபராதத் தொகை செலுத்த வேண்டும் என தண்டனை முறையை  அந்நாட்டி அரசு மாற்றி அறிவித்துள்ளது.   

சீனாவில் பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு காவல்மையங்களில்  அடைத்து வைக்கப்பட்டு வந்தநிலையில் இனி தண்டனைக்கு அபராதத் தொகை செலுத்த வேண்டும் என தண்டனை முறையை  அந்நாட்டி அரசு மாற்றி அறிவித்துள்ளது.   பாலியல் குற்றங்கள் பரவலாக எல்லா நாடுகளிலும் அதிகரித்துக்கொண்டே வருகிறது அதே நேரத்தில் அக்குற்றத்திற்கான தண்டனை  ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு வகையில் வேறுபடுகின்றன.   அந்தவகையில் சீனாவில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் இருந்த இரண்டு ஆண்டு சிறை  என்ற தண்டனையை மாற்றி இனி பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் அபராத தொகை செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

சீனாவில் பாலியல் தொழிலில் ஈடுபடுகிற பெண்கள் வாடிக்கையாளர்கள் பிடிபடுகிறபோது  அவர்கள் கைது செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் கல்வி மையம் என்று அழைக்கப்படும் காவல்   மையங்களில் அடைக்கப்பட்டு அவர்களுக்கு அங்கு நன்னெறி போதனைகள் வழங்கப்பட்டு வந்தது ,  அங்கு அவர்கள் கைவினைப் பொருட்கள் தயாரிப்பு,  மற்றும் பொம்மைகள் உற்பத்தி போன்ற  பணிகளில் கட்டாயப்படுத்தி  ஈடுபடுத்தப்பட்டு வந்தனர்.   தற்போது இந்த முறை முடிவுக்கு வந்துள்ளது .  பாலியல் தொழில் என்பது சட்டவிரோதமாக என்பதில் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவித்துள்ள சீனா ,  குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு தரும்  தண்டனை முறையில் மட்டுமே மாற்றம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது . இனி  பாலியல் குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு 15 நாள் காவல் ,  ’ஐந்தாயிரம் யென்’ (அதாவது 51 ஆயிரம் ரூபாய் ) அபராதம் செலுத்த வேண்டும் என அதிரடியாக தெரிவித்துள்ளது. 

அபராதத்தொகை  என்ற புதிய  தண்டனை முறை மூலம் குற்றத்தில் ஈடுபடுபவர்கள் எண்ணிக்கை குறையும் என்றும், அபராதத் தொகைக்கு பயந்து குற்றத்தில் ஈடுபடுவதை தவிர்ப்பர்  என்பதுடன் தற்போது மாறி வரும் கால சூழலுக்கு இந்தவகை  தண்டனை முறையே உகந்ததாக இருக்கும் என சீனா தெரிவித்துள்ளது.  20 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்த கட்டாய பணியில் ஈடுபடுத்தும்  முறையால்  நல்ல சமூக மாற்றம், மற்றும் பொது ஒழுங்கத்தை  பராமரிக்க  உதவின.  ஆனால் தற்போதைய சூழலுக்கு அது பொருத்தமானதாக இல்லை என்பதால் அதை மாற்றி விட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடதக்கது...
 

click me!