சோதனைச்சாவடி அருகே தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல்... சாலையில் 90 பேரின் உடல் பாகங்கள் சிதறி உயிரிழப்பு..!

Published : Dec 29, 2019, 10:45 AM IST
சோதனைச்சாவடி அருகே தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல்... சாலையில் 90 பேரின் உடல் பாகங்கள் சிதறி உயிரிழப்பு..!

சுருக்கம்

சோமாலியாவில் அல்கொய்தா அமைப்புடன் தொடர்புடைய அல்ஷபாப் தீவிரவாத அமைப்பு, தொடர்ந்து வன்முறைத் தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர். குறிப்பாக சோதனைச் சாவடிகள், ஓட்டல்கள் மற்றும் கடலோர பகுதிகளை குறிவைத்து தாக்குதகள் நடத்தப்படுகின்றன. இதில் அப்பாவி மக்கள் பலர் கொத்து கொத்தாக செத்து மடிகின்றனர். 

சோமாலியாவில் சோதனைச்சாவடி அருகே வெடிகுண்டுகள் நிரம்பிய லாரியை கொண்டு நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 90-க்கும் மேற்பட்டோர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

சோமாலியாவில் அல்கொய்தா அமைப்புடன் தொடர்புடைய அல்ஷபாப் தீவிரவாத அமைப்பு, தொடர்ந்து வன்முறைத் தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர். குறிப்பாக சோதனைச் சாவடிகள், ஓட்டல்கள் மற்றும் கடலோர பகுதிகளை குறிவைத்து தாக்குதகள் நடத்தப்படுகின்றன. இதில் அப்பாவி மக்கள் பலர் கொத்து கொத்தாக செத்து மடிகின்றனர். 

இந்நிலையில், நேற்று மொகடிசுவில் வருமான வரி அலுவலகம் அருகே உள்ள சோதனைச்சாவடியில் பாதுகாப்பு படை வீரர்கள் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட லாரியை கொண்டு வந்து வெடிக்கச் செய்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில், வெடிகுண்டுகள் நாலாபுறமும் வெடித்து சிதறியதில், வீரர்கள் உட்பட அப்பகுதியில் இருந்த 90 பேர் உடல் பாகங்கள் சிதறிய நிலையில் உயிரிழந்து கிடந்தனர். மேலும் 50-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்த குண்டு வெடிப்பு குறித்து மாநகர மேயர் உமர் முகமது கூறிய போது, ``இறந்தவர்களில் பெரும்பாலானோர் பல்கலைக்கழக  மாணவர்கள். அவர்களில் துருக்கியை சேர்ந்த மாணவர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர் என தெரிவித்தார். இதுவரை இந்த தாக்குதலுக்கு எந்த ஒரு இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. 

PREV
click me!

Recommended Stories

இந்தியா எந்த மாயையிலும் இருக்கக்கூடாது..! பதிலடி முன்பை விட இன்னும் பயங்கரமா இருக்கும்..! அசிம் முனீர் மிரட்டல்..!
இந்தியா-ரஷ்யா நட்பால் வயிற்றெரிச்சல்..! கதறப்போகும் தென்னிந்திய விவசாயிகள்..! டிரம்ப் எடுத்த அதிர்ச்சி முடிவு..!