ஒரே நேரத்தில் பல ஏவுகணைகளை செலுத்த உதவும் மிகப் பெரிய ‘சூப்பர் ராக்கெட் லாஞ்சர்’ சோதனையை வடகொரியா வெற்றிகரமாக செய்து முடித்துள்ளது. இதனால், எதிரி நாடுகளான ஜப்பான், தென்கொரியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பீதி அடைந்துள்ளனர்.
ஒரே நேரத்தில் பல ஏவுகணைகளை செலுத்த உதவும் மிகப் பெரிய ‘சூப்பர் ராக்கெட் லாஞ்சர்’ சோதனையை வடகொரியா வெற்றிகரமாக செய்து முடித்துள்ளது. இதனால், எதிரி நாடுகளான ஜப்பான், தென்கொரியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பீதி அடைந்துள்ளனர்.
உலக நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, வடகொரியா தொடர் ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இதற்கு அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதனிடையே, வடகொரிய அதிபர் கிம்மும் அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் சிங்கப்பூரில் சந்தித்து வரலாற்று புகழ்மிக்க பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதன் முடிவில், அணு ஆயுதப் பரிசோதனை கைவிடப்படும் என வடகொரியா அறிவித்தது. அதன் பின்னர், அமெரிக்கா - வடகொரியா இடையிலான பேச்சுவார்த்தையில் முடக்கம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, வடகொரியாவின் எதிர்ப்பையும் மீறி, அமெரிக்கா-தென் கொரியா கூட்டு ராணுவப் பயிற்சியை சமீபத்தில் நடத்தியது. இதனால், கடும் எரிச்சல் அடைந்த வடகொரியா அடுத்தடுத்து ஏவுகணை சோதனைகளை செய்து உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.
இந்நிலையில், வடகொரியா நேற்று மீண்டும் அணு ஆயுத பரிசோதனையில் ஈடுபட்டதை தென்கொரிய ராணுவம் உறுதிப்படுத்தி உள்ளது. இது தொடர்பாக தென் கொரியா ராணுவ அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், `வடகொரியாவின் கிழக்கு கடலோரப் பகுதியிலிருந்து இரு ஏவுகணைகள் கடந்த சனிக்கிழமை விண்ணில் செலுத்தி பரிசோதிக்கப்பட்டன. கடந்த சில வாரங்களில் வட கொரியா மேற்கொள்ளும் 7-வது ஏவுகணை பரிசோதனையாகும்,’ என்று கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன்னின் நேரடி மேற்பார்வையில், ஒரே நேரத்தில் பல ஏவுகணைகளை செலுத்தும் திறன் படைத்த மிகப்பெரிய ‘சூப்பர் ராக்கெட் லாஞ்சர்’ சோதனை நடத்தப்பட்டு உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது குறித்து வடகொரிய அதிபர் கிம் கூறுகையில், இந்த புதிய மேம்படுத்தப்பட்ட ஆயுதம் மிகவும் வலிமையான ஆயுதம். எரிச்சலூட்டும் வகையில் பெருகி வரும், எதிரி நாடுகளின் ராணுவ அச்சுறுத்தல்கள், ஆதிக்க அழுத்தங்களை தயக்கமின்றி தடுக்கும் வகையில், ஆயுத மேம்பாட்டு நடவடிக்கைகளை தொடர வேண்டிய தேவை உள்ளது என அதிபர் கிம் ஜாங் உன் கூறிள்ளார். வடகொரியாவின் நடவடிக்கையால் தென்கொரியா, ஜப்பான் நாடுகள் பீதி அடைந்துள்ளனர்.