அழிவின் பாதையில் அமேசான் காடு !! கட்டுக்கடங்காமல் எரியும் காட்டுத்தீ!! 44000 வீரர்கள் களமிறங்கினர் ..

By Asianet Tamil  |  First Published Aug 26, 2019, 2:57 PM IST

மளமளவென பற்றி எரியும் அமேசான் காட்டுத் தீயை கட்டுப்படுத்த 44000 தீயணைப்பு மற்றும் ராணுவ வீரர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.


அமேசான் காடு 55 லட்சம் சதுரடி நிலப்பரப்பில் பரந்து விரிந்திருக்கிறது . இங்கு பல்வேறு அரிய வகை தாவரங்களும் உயிரினங்களும் வாழ்ந்து வருகின்றன . இந்த நிலையில் இங்கு வரலாறு காணாத அளவில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது . 

Latest Videos

மிக வேகமாக பரவும் இந்த காட்டுத் தீயில் சிக்கி பறவைகள் , விலங்குகள் பல உயிரிழந்திருக்கும் என்றும் மேலும் அரிய வகை தாவரங்கள் பலவும் அழிந்திருக்கும் என்றும் அஞ்சப்படுகிறது .இந்த காட்டு தீயால் பிரேசில், பொலிவியா, பெரு, கொலம்பியா உள்ளிட்ட பல நாடுகளிலும் பரவியுள்ளதால் அங்கு வசிக்கும் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். 

அமேசான் காடுகளில் எரியும் காட்டுத் தீயை அணைக்கும் முயற்சிக்கு உதவ ராணுவப் படைகளை அனுப்ப பிரேசில் அதிபர் போல் சாயர் போல்சனாரூ உத்தரவிட்டிருந்தார். அதன்படி காட்டுத் தீயை அணைக்க கடுமையாக போராடி வரும் நிலையில்  தற்போது தீயை கட்டுக்குள் கொண்டு வர 44000 தீயணைப்பு மற்றும் ராணுவ வீரர்களை களமிறங்கியுள்ளனர் .

மேலும்  பூர்வகுடிகள் வாழும் இடங்கள், குடியிருப்புப் பகுதிகளை ஒட்டியுள்ள காடுகளில் பிரேசில் ராணுவப் படையினர் அனுப்பப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, அமேசான் காட்டில் ஏற்பட்டுள்ள தீ விபத்தை விரைந்து கட்டுப்படுத்த வலியுறுத்தி, பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் போராட்டம் நடைபெற்றது.

click me!