பிரதமர் என்றால் மோடியைப்போல் கெத்தா இருக்கணும்...! பம்மக்கூடாது... இம்ரான்கானுக்கு பாகிஸ்தான் மக்கள் அட்வைஸ்...!

By Asianet Tamil  |  First Published Aug 26, 2019, 2:39 PM IST

பிரதமர் என்றால் இந்திய பிரதமர் மோடியைப்போல்  கெத்தாக இருக்க வேண்டும், ஆனால் நம்நாட்டு பிரதமரோ நாட்டிற்கு யார் வந்தாலும் அல்லது எந்த நாட்டிற்கு இவர் சென்றாலும் அந்த நாட்டு தலைவர்களின் தனிப்பட்ட கார் டிரைவரைப்போல் மாறிவிடுகிறார்.  இது நாட்டிற்கே  அவமானம் ,  நாட்டின் பிரதமராக பதவியேற்றால் மற்றநாடுகளை விட பாகிஸ்தானை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்வோன் என்று சொன்ன லட்சனம் இதுதானா என்று இம்ரான்கானை பாகிஸ்தான் மக்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.


ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்திய பிரதமர் உயரிய விருது பெற்றுள்ளார், ஆனால் அந்நாட்டு  இளவரசருக்கு கார் ஓட்டி  நல்ல டிரைவர் என்று இம்ரான்கான் பெயர் பெற்றுள்ளார் இது பாகிஸ்தானுக்கு அவமானம் என அந்நாட்டு மக்கள் பிரதமர் இம்ரான்கானை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 

Latest Videos

5 நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் பிரான்ஸ் நாட்டுப்ப பயனத்தை முடித்துவிட்டு ஐக்கிய அரபு அமீரகத்திற்குச் சென்ற அவர் . அபுதாபி இளவரசர் ஷேக் முகமது பின் ஜயத் அல் நஹ்யனை சந்தித்தார். பின்னர் அங்கிருந்து பஹ்ரைன் நாட்டுக்கு சென்ற பிரதமர் மோடியை  பஹ்ரைன் நாட்டு இளவரசர் கலிபா பின் சல்மான் அல் கலிபா வரவேற்றார், பின்னர்மோடியை கவுரவிக்கும் வகையில் அவருக்கு பஹ்ரைன் நாட்டின் உயரிய விருதான  அரசர் ஹமாத்தின் மறுமலர்ச்சி விருது அளிக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவிற்கு கிடைத்த கவுரவமாக கருதப்படுகிறது.  மோடிக்கு அமீரகம்  விருது வழங்கியிருப்பது பாகிஸ்தானில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அந்நாட்டு பிரதமரை பாகிஸ்தான் மக்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதாவது இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் புல்வாமா தாக்குதல் நடந்த சில தினங்களில் ஐக்கிய அரபு அமீரகத்தின்  இளவரசர் ஷேக் முகமது பின் ஜயத் அல் நஹ்யான் அரசு முறைப்பயணமாக பாகிஸ்தான் வந்திருந்தார், அப்போது  பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தான் ஒரு பிரதமர் என்பதையும் மறந்து இளவரசரின்  காரையோட்டி, இளவரசரின் தனி கார் டிரைவரைப்போல் செயல்பட்டார், உரிய ஒட்டுனர்கள் இருந்தும், நாட்டின் பிரதமர் என்பதையும் மறந்து , அப்பதவிக்கு உள்ள மறபையும் மீறி,  கார் ஓட்டியது பாகிஸ்தான் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.  இந்த நிலையில் பஹ்ரைனுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய  பிரதமருக்கு  அந்நாட்டின் உயரிய விருதான அரசர் ஹமாத்தின் மறுமலர்ச்சி விருது வழங்கப்பட்டது.  

இதை கேள்விப்பட்ட பாகிஸ்தான் மக்கள், பிரதமர் என்றால் இந்திய பிரதமர் மோடியைப்போல்  கெத்தாக இருக்க வேண்டும், ஆனால் நம்நாட்டு பிரதமரோ நாட்டிற்கு யார் வந்தாலும் அல்லது எந்த நாட்டிற்கு இவர் சென்றாலும் அந்த நாட்டு தலைவர்களின் தனிப்பட்ட கார் டிரைவரைப்போல் மாறிவிடுகிறார்.  இது நாட்டிற்கே  அவமானம் ,  நாட்டின் பிரதமராக பதவியேற்றால் மற்றநாடுகளை விட பாகிஸ்தானை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்வோன் என்று சொன்ன லட்சனம் இதுதானா என்று இம்ரான்கானை பாகிஸ்தான் மக்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.  பாகிஸ்தான் நாடாளுமன்றத்திலும் மோடியையும், இம்ரான்கானையும் ஒப்பிட்டு காரசார விவாதம் நடைபெற்று வருகிறது குறிப்பிடதக்கது.

click me!