ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தால் ஆத்திரமடைந்துள்ள இந்தியாவுக்கு எதிராக போர் ஏற்படும் என எச்சரித்துள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது தாக்குதல் நடந்தால், போர் அறிவிக்கப்படும் என்று பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் ஷேக் ரஷீத் கண்ணீருடன் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், ’’காஷ்மீர் மாநிலத்துக்கு அளித்து வந்த சிறப்பு அந்தஸ்து பிரிவு 370 நீக்கியதன் மூலம் இந்தியாவின் பணி முழுமை அடைந்துவிட்டது என்று யாரும் நினைக்கக் கூடாது. அது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீதும் தாக்குதல் நடத்தலாம். அப்படி ஒரு தாக்குதல் இந்தியா மேற்கொண்டால், அது போராக உருவெடுக்கும். பாகிஸ்தானே மிகப்பெரிய நாடு, அதன் மீது தாக்குதல் நடந்தால், துணைக்கண்டத்தின் வரைபடமும் மாறும். ஏனெனில் இந்த யுத்தம் இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் மட்டுமே நடக்கக்கூடிய போராக இருக்காது’’ என எச்சரித்துள்ளார்.
அதேபோல் ஆகஸ்ட் 14 பாகிஸ்தானின் சுதந்திர தினத்தன்று, பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், "இந்தியாவின் நடவடிக்கை காஷ்மீர் வரை நின்றுவிடாது. அது பாகிஸ்தானை நோக்கி வரும். பாகிஸ்தான் ராணுவம் முழுமையாக அறிந்திருக்கிறது. முழு காஷ்மீர் என்று இந்தியா திட்டமிட்டுள்ளனர். பாலகோட் தாக்குதல் போல இன்னும் பயங்கரமான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
எங்கள் மீது தாக்குதல் நடந்தால், நாங்களும் பதிலடி தாக்குதல் நடத்துவோம். பாகிஸ்தான் இராணுவம் தயாராக உள்ளது. போர் நடந்தால் அது உலகின் பொறுப்பு’’ எனக் கூறியிருந்தார்.