அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் ஆகிய 3 நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகளுக்கு 2022ம் ஆண்டுக்கானஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் ஆகிய 3 நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகளுக்கு 2022ம் ஆண்டுக்கானஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிவியல், இலக்கியம், இயற்பியல், மருத்துவம், பொருளாதாரம், வேதியியல் உள்ளிட்ட பிரிவுகளில் சிறந்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வருகிறது.
முதல்நாளான நேற்று மருத்துவத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இன்று இயற்பியலுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகளுக்கு வழங்கப்பட்டது.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி அலைன் ஆஸ்பெக்ட், அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் கிளாஸர், மற்றும் ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி ஆன்டன் ஜீலிங்கர் ஆகியோருக்கு நோபல் பரிசு கூட்டாக வழங்கப்பட்டது.
BREAKING NEWS:
The Royal Swedish Academy of Sciences has decided to award the 2022 in Physics to Alain Aspect, John F. Clauser and Anton Zeilinger. pic.twitter.com/RI4CJv6JhZ
இந்த மூன்று விஞ்ஞானிகளும் “ போட்டோன்கள் குறித்த சோதனை, பெல் சமநிலையற்ற தன்மையில் ஏற்படும் கூறுகள், குவாண்டம் தகவல் அறிவியல்” ஆகியவற்றில் செய்த ஆய்வுக்காகவழங்கப்பட்டது.
நாளை(புதன்கிழமை) வேதியியலுக்கும், வியாழக்கிழமை இலக்கியத்துக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்படுகிறது. வெள்ளிக்கிழமை அமைதிக்கான நோபல் பரிசும், 10ம் தேதி பொருளாதாரத்துக்கான நோபல் பரிசும் அறிவிக்கபடுகிறது. இதில் அமைதிக்கான நோபல் பரிசு நார்வேயிலும், மற்ற பிரிவுக்கான நோபல் பரிசு ஸ்டாக்ஹோமிலும் அறிவிக்கப்படுகின்றன.
கடந்த ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு ஜப்பானைச் சேர்ந்த சுயுகுரோ மனாபே, ஜெர்மனியைச் சேர்ந்த கிளாஸ் ஹசில்மேன், இத்தாலியைச் சேர்ந்த ஜார்ஜியோ பாரிசி ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில், சுயுகுரோ மனாபே, கிளாஸ் ஹசில்மேன் ஆகியோருக்குப் புவியின் காலநிலை மாறுபாட்டை அளவிடுதல் மற்றும் புவி வெப்பமடைதலைக் கணித்தல் போன்ற ஆய்வுக்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.