’வீடியோக்களில் தோன்றுவது நித்யானந்தாவே அல்ல...’அதிர வைக்கும் நிஜ நித்யானந்தா..!

Published : Dec 13, 2019, 12:16 PM IST
’வீடியோக்களில் தோன்றுவது நித்யானந்தாவே அல்ல...’அதிர வைக்கும் நிஜ நித்யானந்தா..!

சுருக்கம்

தினமும் சமூகவலைதள வீடியோக்களில் தோன்றி சத்ஸங்கம் செய்வது நித்யானந்தாவே அல்ல என பலரும் சந்தேகம் கிளப்புவதாக அவரே கிண்டலடித்துக் கொண்டிருக்கிறார்.

ஒட்டுமொத்த சமூகவலைதளவாசிகளும்  காமெடியனாக பார்க்கப்படும் ஆளாக நித்யானந்தா உருவகப்படுத்தப்பட்டுள்ளார். இது குறித்து அவர், ‘’ இப்படி எனக்கே சந்தேகம் வருகிற அளவுக்காடா கிரியேட் பண்ணி விடுவீங்க. என்னையைத் தான் அவதூறு செய்றாங்கன்னு நல்லாத் தெரியுது. ஆனா அதை படிச்சா நமக்கே ருசியா இருக்கு’ எனக்கூறும் நித்யானந்தா தனது உடல் எடையை குறைக்க கடந்த ஒருமாத  காலமாக வெறும் பழச்சாறுகளை மட்டுமே பருகி வருவதாக அவரது சீடர்கள் கூறுகின்றனர். இதனால் கிட்டத்தட்ட 8 கிலோ உடல் எடை குறைந்து இளமையாக காட்சியளிக்கிறார் நித்யானந்தா.  

இதுகுறித்து நித்யானாந்தா, ‘’என்னென்னவெல்லாம் சந்தேகம் கிரியேட் பண்றாய்ங்க. கடைசிய என்னைப்பற்றி ஒருத்தன் எழுதினான். அதை படித்த உடனே எனக்கே சந்தேகம் வந்திடுச்சு. நானே ஆடித்தான் போய்ட்டேன். ‘ டேய் நித்யானந்தர் போட்டோவை பாருடா. இப்ப தினம் வந்து யூடியூப்ல சதசங்கம் கொடுக்கிறது நித்யானந்தாவே இல்லடானு சொல்றான். அய்யோ டேய்ய் டேய் டேய்... ஆளப்பாருடா.. நடி உடை பாவனைகளை பாருடா... அவரோட சைஸை பாருடா... இருந்த சைஸு... இப்ப இருக்கிற சைஸு... நடை உடை சடை... இது சாத்தியமே இல்லடா.

 

இது எப்படிடா அந்த வயசில இருந்தவரு இந்த வயசுக்கு வந்திருக்க முடியும்..? இது நித்யானந்தாவே இல்லடா’னு பேசிக்கிறாய்ங்க. அடப்பாவிகளா... எனக்கே கொஞ்சம் சந்தேகம் வந்திடுச்சு. ஐயய்யோ இது ஒருவேளை பாடி டபுளா? என அவர் நகைச்சுவையாகவே தன்னைப்பற்றி கிண்டலடித்துக் கொள்கிறார்கள். 

PREV
click me!

Recommended Stories

ஜப்பானை மீண்டும் உலுக்கிய நிலநடுக்கம்! சிறிது நேரத்தில் விலகிய சுனாமி எச்சரிக்கை!
40 நிமிடம் காக்க வைக்கப்பட்ட ஷெரிப்..! மோடியை தேடி வரும் புடின்..! பாகிஸ்தான் பிரதமரின் பரிதாப நிலை!