வேன்-லாரி நேருக்கு நேர் மோதல்... ஒரே குடும்பத்தை சேர்ந்த 24 பேர் உட்பட 28 உடல் கருகி உயிரிழப்பு..?

By vinoth kumar  |  First Published Dec 14, 2019, 2:39 PM IST

நைஜீரியாவில் மினி வேன் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 28 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். 


நைஜீரியாவில் மினி வேன் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 28 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். 

Latest Videos

நைஜீரியா நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள பவ்ஜ் நகரில் உள்ள நெடுச்சாலையில் ஒரு மின் வேன் சென்று கொண்டிருந்தது. அந்த வேனில் 24 பேர் பயணம் செய்தனர். குபி ஹரி என்ற பகுதியில் வேன் சென்றுக்கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியது. பின்னர், மறுபுறம் சந்தைக்கு மாடுகளை ஏற்றிச்சென்ற லாரி மீது வேகமாக மோதியது. 

இந்த கோர விபத்தில் இரு வாகனங்களிலும் தீ பற்றி எரிந்தது. இதில், வேனில் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 24 பேரும், லாரியில் 4 பேர் என மொத்தம் 28 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து அப்பகுதியில் மிகப்பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நைஜீரிய நாட்டில் சாலைகள் மிகவும் மோசமாக இருப்பதாலும், பயணிகளை அதிகளவில் ஏற்றிச்செல்வதாலும் இதுபோன்ற விபத்துக்கள் அதிகளவில் நடப்பதாக கூறப்படுகிறது.

click me!